னை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம்மியை எல்பிடபிள்யூ செய்தபோது 250ஆவது விக்கெட்டை கைப்பற்றிறார் ஜூலன். இதுவரை 199 ஒரு நாள் ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார்.
டாம்மியை ஆட்டமிழக்கச் செய்தது ஜூலன் கோஸ்வாமிக்கு உலகக் கோப்பை தொடரில் 41-ஆவது விக்கெட் ஆகும். பிற நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் 200 விக்கெட்டுகளைக் கூட ஒரு நாள் ஆட்டத்தில் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.எல்.: இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற முதல் அணி!
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
கேரளா - ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறும் இறுதி போட்டியில் கேரளா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹைதராபாத் அணி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
உடல் தகுதி தேர்வில் வென்ற ஹார்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டிய உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
யோ-யோ டெஸ்டில் 17 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
தேசிய கிரிக்கெட் அகாடெமியில் புதன்கிழமை நடைபெற்ற டெஸ்டில் இவர் பங்கேற்றார். தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் விவிஎஸ் லஷ்மணும் ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.
காயத்திலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மட்டுமே உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். ஹார்திக் பாண்டியாவுக்கு வழக்கமான உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி). டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி மார்னஸ் லபுஸ்சேன் (ஆஸி.,),ஜோ ரூட் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) ஆகியோர் நீடிக்கின்றனர்.
இந்திய வீரர் விராட் கோலி 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் 2022: தீபக் – ருதுராஜ் சிஎஸ்கே அணியில் இணைவது எப்போது? நீளும் கேள்விகள்!
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 3-வது இடமும் வகிக்கிறார்கள். பகல்-இரவு டெஸ்டில் 8 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 இடங்கள் உயர்ந்து 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“