இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி அமெரிக்க இளம் வீரர் டெய்லர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20ஆவது இடம் வகிக்கும் 24 வயது அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய டெய்லர், 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6-3 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதனால், 2வது செட்டை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. எனினும், அடுத்தடுத்து அதிரடியாக விளையாடி அடுத்த செட்டையும் அவர் கைப்பற்றினார். இந்த போட்டியில் 6-3, 7-6 (7/5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று டெய்லர் சாம்பியன் ஆனார்.
இவர் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: தங்க ஷூ விருது வென்ற வீரர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஐதராபாத் அணி கேரளாவை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நேற்றிரவு கோவாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.
வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.
இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கேரளாவின் முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ ஐதராபாத் கோல் கீப்பர் லட்சுமிகாந்த் கட்டிமணி, பாய்ந்து விழுந்து பிரமாதமாக தடுத்து ஹீரோவாக ஜொலித்தார். அதே சமயம் ஐதராபாத் தனது முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ கோலாக மாற்றி அசத்தியது.
திரில்லிங்கான பெனால்டி ஷூட் அவுட் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியனானது.
ஐதராபாத் அணி வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது.
சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது, அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. 187.5 ஓவர்களில் 411 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 39.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்து திணறியது.
எனினும், கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 65 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது, கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இரு அணிகளுக்கிடையே முடிவு கிட்டாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.
வெள்ளி வென்ற பாட்மிண்டன் வீரரை பாராட்டிய பிரதமர்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான டெர்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 என்ற நேர் செட்டில் லக்ஷயா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
‘மைதானத்தில் மட்டுமல்ல, டான்ஸும் ஆடுவாங்க!’ அனிருத் பாட்டுக்கு செம ஸ்டெப் போட்ட பி.வி சிந்து
Proud of you @lakshya_sen! You’ve shown remarkable grit and tenacity. You put up a spirited fight. Best wishes for your future endeavours. I am confident you will keep scaling new heights of success.
— Narendra Modi (@narendramodi) March 20, 2022
லக்ஷயா சென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த நிலையில், லக்ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறும்போது, "உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் லக்ஷயா சென்.! நீங்கள் குறிப்பிடத்தக்க துணிச்சலையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். வெற்றிக்காக சுறுசுறுப்பாக போராடுனீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று மோடி டுவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் லக்ஷயா சென்னுக்கு வாழ்த்து கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.