கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு அணியில் பட்டையை கிளப்பி வரும் தினேஷ் கார்த்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "சிறந்த வீரர்கள் உள்ளனர். லெஜண்ட்டுகள் உள்ளனர். சச்சினும் அந்த வரிசையில் எப்போதும் இருக்கிறார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் - கங்குலி தகவல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது.
லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை
இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 24 வயதான ரவிகுமார் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார்.
ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையில் நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
இறங்கி வந்தா நீ பார்த்துக்கோ… சாம்சனிடம் தமிழில் பேசிய அஸ்வின் – வைரல் வீடியோ
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா தரப்பில் ஆன்ட்ரே ரசல் இறுதி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு இன்னிங்சின் இறுதி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20வது ஓவரில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரசல் படைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil