இன்னொரு ஐ.பி.எல் தொடருக்கு தயாராகும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என்று ஃபாப் டூ பிளெசிஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இவரது பதிவுக்கு சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஜாலியாக கமென்ட் செய்தார்.
முன்பைவிட துப்பாக்கிகள் வலிமையாக உள்ளன என்று ருதுராஜ் பதிலளித்தார். டூ பிளெசிஸ் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் வெளியிட்ட பதிவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஜாலியாக சமூக வலைதளத்தில் அவருக்கு கமென்ட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் நீண்ட காலம் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இந்தியாவின் இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
தோனிக்கு உதவி தேவைப்பட்டால் முதல் ஆளாக நிற்பேன்: கெளதம் கம்பீர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கம்பீர் ஓய்வை அறிவித்த பிறகு தோனிக்கும் கெளதம் கம்பீருக்கும் மோதல்கள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் பல நேரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். தோனியுடனான மோதல் குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது:
எனக்கு தோனியை பிடிக்கவில்லை என்று கூறுவது தவறானது. தோனி மீது எனக்கு பரஸ்பரமான மரியாதை இருக்கிறது. அது எப்போதும் நிலைத்திருக்கும். 138 கோடி மக்கள் முன்னிலையில் எங்கு வேண்டுமானாலும் என்னால் இதை சொல்ல முடியும்.
வாழ்க்கையில் எப்போதாவது டோனிக்கு உதவி தேவைப்பட்டால் அவருக்காக நான்தான் முதலில் நிற்பேன். ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் அவர் நிறைய செய்திருக்கிறார் என தெரிவித்தார்.
தோனி குறித்து கம்பீர் இவ்வாறு பேசியுள்ளது இருவருக்கும் இடையே இருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'திறமையான வீரர்களை கொண்டிருக்கிறோம்'
எங்கள் அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, "ஐபிஎல் போட்டியில் ‘பஞ்சாப் கிங்ஸ், அணி பட்டத்தை வெல்லும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக உருவெடுத்து இருப்பதாக நம்புகிறேன். இனி நெருக்கடிக்கு மத்தியில் வீரர்கள் தங்களது முழு திறமை, திட்டமிடலை சரியாக வெளிப்படுத்துவதை பொறுத்து எல்லாம் அமையும்'' என்று அந்த அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.
ஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!
கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் 3-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, முதல்முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கும் ஐதராபாத் எப்.சி.யுடன் மோதுகிறது.
கொரோனா பரவலுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண முதல்முறையாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil