/tamil-ie/media/media_files/uploads/2022/04/sports-1.jpg)
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வென்ற 2-வது உலக கோப்பை பட்டம் அதுவாகும்.
இலங்கை அணிக்கு எதிராக நடந்த இறுதி போட்டியில் கேப்டன் தோனி - மற்றும் கம்பிரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அந்த இறுதி போட்டியில் தோனி சிக்சர் அடித்து போட்டியை முடிக்கும் தருணம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகும்.
அதே போல் தோனி போட்டியை முடிக்கும்போது அப்போது வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியின் வர்ணனையும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒன்றாகும்.
இந்த நிகழ்வு நடந்து நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டு இருந்த ரவி சாஸ்திரி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதி நிமிடங்களில் செய்த வர்ணனையை மீண்டும் சொல்லி காண்பித்தார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Happy 11th, Champs #worldcup2011 - with @harbhajan_singh @sachin_rt @YUVSTRONG12 @imVkohli @msdhoni @ImZaheer @GautamGambhir @virendersehwag @iamyusufpathan @ashwinravi99 @ImRaina pic.twitter.com/qAgdSIu9N5
— Ravi Shastri (@RaviShastriOfc) April 2, 2022
மகளிர் உலகக் கோப்பை- அதிரடி சதம் விளாசிய ஆஸி., வீராங்கனை
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர்.
இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
ராகேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி சதம் பதிவு செய்து அசத்தினார்.
அவர் 100 பந்துகளில் 13 பவுண்டரியுடன் தனது சதத்தை பதிவுசெய்தார்.
பின்னர், அடித்து விளைாயடத் தொடங்கிய அவர், 138 பந்துகளில் 170 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்மிழந்தார்.
MI vs RR Highlights: சதம் விளாசிய பட்லர்; ராஜஸ்தானுக்கு அசத்தல் வெற்றி!
மியாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், நார்வே வீரர்கள் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டங்களில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 7-6 (7-5), 7-6 (7-2) என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் ஹூர்காச்சையும் (போலந்து), நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செருன்டோலோவையும் தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினர்.
மியாமி ஓபன் டென்னிஸ்; இறுசிச்சுற்றில் ஸ்பெயின், நார்வே வீரர்கள்
மியாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், நார்வே வீரர்கள் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டங்களில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 7-6 (7-5), 7-6 (7-2) என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் ஹூர்காச்சையும் (போலந்து), நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செருன்டோலோவையும் தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினர்.
கேக் வெட்டி கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அணி நிர்வாகம் இன்று ஸ்விட் சர்பரைஸ் ஒன்றை தந்துள்ளது. ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து முதல் முறையாக சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியை தழுவியது.
அதுவும் 2வது போட்டியில் 210 ரன்கள் அடித்தும் மோசமான பந்துவீச்சு காரணமாக சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களும், வீரர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
தோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பை வென்று 11 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதையடுத்து இந்த வரலாற்று சம்பவத்தை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பயிற்சி முடித்து வந்த வீரர்களுக்கு சின்ன சர்பரைஸ் தந்தது. தோனிக்கு 2 பெரிய கேக்குகளை வாங்கி கொடுத்து சிஎஸ்கே அணி இந்த நாளை கொண்டாடியது. தோனியும் இதனை ஏற்று கொண்டு உற்சாகமாக கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.