பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை கேப்டன் ஜடேஜா விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து சென்னை அணி கேப்டன் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜடேஜா, நாங்கள் பவர்-பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். முதல்பந்தில் இருந்தே ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வலுவாக மீண்டு வர நாங்கள் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.
ஒரே ஆட்டத்தில் 2 வீரர்கள் சதம் பதிவு செய்து சாதனை
நெதர்லாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டிலும், கான்வேயும் களமிறங்கினர்.
ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கப்டிலுடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். இருவரும் நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். கப்டில் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் யங் 120 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
CSK vs PBKS: சி.எஸ்.கே தொடர்ந்து 3-வது தோல்வி
தேசிய கூடைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி வெற்றி
71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.
‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக ஆடவர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை சந்தித்தது. அபாரமாக ஆடிய தமிழக அணி 85-47 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணியில் பாலதனேஷ்வர் 15 புள்ளிகளும், அரவிந்த் 14 புள்ளிகளும் எடுத்தனர்.
மகளிர் பிரிவில் தமிழக அணி தனது முதல் லீக்கில் (‘ஏ’ பிரிவு) 62-100 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வேயிடம் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, கூடைப்பந்து அணியை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 பவுண்டரிகள் அடித்த வங்கதேச வீரர்
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் மோதி வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் வங்க தேச வீரர் மஹ்மதுல் ஹசன் ராய் 137 ரன்கள் எடுத்தார். அவர் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் பதிவு செய்தார்.
137 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை வில்லியம்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார். முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 10 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் தற்போது விளையாடி வருகிறது.
இந்த இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் மஹ்மதுல் ஹசன் ராய் 4 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil