கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் புரோ கபடி லீக் (பி.கே.எல்) போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போது ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிட்டு அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ள நிலையில், பி.கே.எல் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் போட்டிகளை ஒளிபரப்பும் ஊடக உரிமை ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் வேறு புதிய ஊடகம் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புரோ கபடி லீக் 2014 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது, அப்போதிலிருந்து போட்டி ஒளிபரப்பு பார்ட்னராக ஸ்டார் இந்தியா நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு புரோ கபடி லீக்கை சொந்தமாக்கிக் கொண்ட மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், புரோ கபடி லீக்கின் 74 சதவீத பங்கை பெற்று பெரும்பான்மை உரிமையாளராக உள்ளது.
மஷால் ஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், பி.கே.எல் கமிஷனருமான அனுபம் கோஸ்வாமி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தாண்டு நடைபெற பி.கே.எல் போட்டிகள் பற்றியும், ஏப்ரல் மாதம் நடைபெறும் இ-ஏலம் பற்றியும் சுருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இருந்து பி.கே.எல்லின் வளர்ச்சி எப்படி உள்ளது?
நம் நாட்டில் புரோ கபடி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பி.கே.எல் போட்டிகளின் வணிகம் புதிது மற்றும் இதன் வளர்ச்சி நீண்ட காலத்திற்கு இருக்கும். நாங்கள் இதுவரை 7 சீசன்கள் மட்டும் தான் முடித்துள்ளோம். இந்தாண்டுதான் எங்களுடைய 8 சீசனை தொடங்க உள்ளோம். மற்றும் இந்தாண்டு முதல் புதிய ஊடக உரிமை ஒப்பந்தத்தை நாங்கள் கொண்டு வரமுடிவு செய்துள்ளோம். கடந்த சீசனில் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கை 328 மில்லியனாக உள்ளது.
2014ம் ஆண்டும் எட்டு அணிகளுடன் லீக்கை தொடங்கினோம். இப்போது 12 அணிகள் உள்ளது. நாட்டின் முன்னணி விளையாட்டுகளின் தரவரிசையில் நாங்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளோம். அதே வேளையில் அதிக போட்டிகளை நடந்தும் லீக்காகவும் நாங்கள் உள்ளோம்.
கபடி ஒரு உட்புற விளையாட்டு மற்றும் உடலோடு தொடர்புடைய விளையாட்டு, மற்றும் தொற்று குறித்த அச்சம் இன்னும் நீடித்து வருகிறது. அப்படி இருக்கையில் போட்டியை எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்?
ஜூன் முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம். மற்றும் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மத்திய – மாநில அரசுகள் கொடுத்துள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவோம். அதோடு வீரர்கள் மற்றும் போட்டியுடன் தொடர்புடைய அதிகாரிகளை தனிமைப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் துரிதப்படுத்த உள்ளோம்.
ரசிகர்கள் கலந்து கொள்வார்களா?
இது குறித்து மற்ற போட்டியிலிருந்து கற்றுக் கொள்ள உள்ளோம். போட்டி நடத்துவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. அதே வேளையில் அரசின் விதிமுறைகளும் மாற வாய்ப்புள்ளது. இருப்பினும் போட்டியை பாதுகாப்பாகவே நடத்த திட்டமிட்டுளோம்.
வீரர்கள் தடுப்பூசிகளை எடுக்க வேண்டுமா?
வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடுக்கொள்வது ஒரு நல்ல திட்டம் ஆகும். மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் வழிமுறைகளை கடைபிடிக்க உள்ளோம். தற்போது வரை விளையாட்டு அமைச்சகம் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கான யோசனைக்கு மிகவும் ஆதரவளித்து வருகிறது.
பி.கே.எல் போட்டிகளின் டெண்டர் (ஐ.டி.டி) தொடர்பாக பிற ஒளிபரப்பாளர்கள் ஆர்வமாக உள்ளார்களா?
நாட்டில் அதிக தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பி.கே.எல் 2வது இடத்தில் உள்ளது. அதோடு இது கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாகவும் உள்ளது.
சுற்றுச்சூழல் வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கும் ஒன்றாக கபடி போட்டி உள்ளது. இது டிவி மற்றும் OTT இல் ஒளிபரப்பப்படுவது மட்டுமல்லாமல், பேண்டஸி தளங்களிலும் ஒளிபரப்ப உள்ளது. அங்கு ஏற்கனவே கபடியை பற்றி படங்கள், பத்லாப்பூர் பாய்ஸ் முதல் பங்கா வரை போன்ற ஆவணப்படங்கள் உள்ளன. மற்றும் நாங்கள் கவனம் செலுத்தும் போர்ட்டல்கள் வணிக மாதிரிகளை உருவாகின்றன.
போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் டிவி வைத்திருப்பது எவ்வளவு முக்கியம்?
லீக் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள மஷால் ஸ்போர்ட்ஸின் முதன்மை முதலீட்டாளராக ஸ்டார் நிறுவனம் உள்ளது. எனவே அதன் முக்கியத்துவத்தை இங்கு நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பி.கே.எல் போட்டிகள் ஒரு சிறந்த ஊடகச் சொத்தாக மாறியுள்ளது. மற்றும் அது எந்த ஊடக பங்குதாரருக்கும் பயனளிக்கும் என்பதும் மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் அந்த ஊடகச் சொத்தை உருவாக்குவதில் ஸ்டாரின் பங்கு யாராலும் தவறவிடப்படவில்லை. இது உரிமையாளர்கள் உட்பட பி.கே.எல் இன் அனைத்து பங்குதாரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டார் நிறுவனம் பெரிய அளவில் வந்து ஊடக உரிமை ஏலத்தில் பங்கேற்கும் என்று நம்புகிறோம்.

ஸ்டார் நிறுவனத்துடன் வைத்திருந்த வருவாய் பங்கு ஏற்பாட்டில் உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்ததாக செய்திகள் வந்தன. நீங்கள் அதை என்ன செய்தீர்கள்?
எந்த ஏமாற்றமும் இல்லை. வருவாய் பங்கு பொறிமுறையைப் பற்றி எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. இது எங்கள் ஒப்பந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது அனைத்து பங்குதாரர்களுடனும் மிகவும் தெளிவாக உள்ளது. மற்றும் ஊடக உரிமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்களும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
அணியின் உரிமையாளர்கள் பி.கே.எல் இன் மதிப்பை ஒரு சிறந்த ஊடக சொத்தாக தெளிவாக உணர்கிறார்கள். ஊடக உரிமை ஏலம் குறித்தும் அவர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. பி.கே.எல் இல் உள்ள வருவாய் பங்கு ஏற்பாடுகள், முற்றிலும் மஷல் நிறுவனத்திற்கும், உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ளது. அவை தொடர்ந்து இருக்கும்.
ஏலத்திற்குப் பிறகு வருவாய் பங்கு அளவு அதிகரிக்குமா?
ஆம், ஆனால் அது ஊடக உரிமை ஏலத்தில் உள்ள தொகைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். ஏற்கனவே உள்ள விநியோகத்திற்கான கட்டமைப்பானது அப்படியே தொடரும். இது உரிமையாளர்களுக்கும் மஷலுக்கும் இடையிலான மிக விரிவான வருவாய் பங்கு ஒப்பந்தமாகும்.
இது ஒரு முறையான செயல்முறை அதில் ஒரு பகுதியாகும். ஊடக உரிமைகள் மதிப்பு ஆராய்ந்து உணரப்பட்ட விதத்தில் தொடர்ச்சியான கட்டமைப்பு உள்ளது.
புதிய ஊடக உரிமை ஒப்பந்தம் எத்தனை ஆண்டுகள்?
முந்தைய ஒப்பந்தம் சீசன் 2 முதல் சீசன் 7 வரை இருந்தது. அடுத்து வரவ உள்ளது சீசன் 8 முதல் 12 வரை ஐந்தாண்டு ஒப்பந்தமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil