விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,
Advertisment
1.கோவிட் -19 வைரஸ் எதிர்த்து மருத்துவர்கள், காவலர்கள் உட்பட பலரும் செய்த தியாகங்களை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் #RaiseTheBat தொடர் என்று அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கடந்த ஆண்டு இதே நாள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் டார்கெட்டை மெல்ல நெருங்கிய ஆப்கானிஸ்தானை, ஷமி தனது அபார ஹாட்ரிக்கால் கட்டுப்படுத்த த்ரில் வெற்றிப் பெற்றது இந்தியா.
3. 24 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், அதாவது 1996ம் ஆண்டு, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், தனது முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார் தாதா கங்குலி. இதில், மேட்டர் என்னவெனில், அவரது முதல் டெஸ்ட் போட்டியே இது தான்.
4. பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில் கிரிகோர் டெமிட்ரோவ் கலந்து கொண்டு விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது.
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டெமிட்ரோவ் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ‘‘மொனோகாவில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.
நான் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் இப்போது வீடு திரும்பி மீண்டு வருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
5. வெஸ்ட் இண்டீசின் ஜெரோம் டெய்லர், இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். 2006ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கைப்பற்றிய ஜெரோம், அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
☝️ Michael Hussey b Taylor
☝️ Brett Lee lbw Taylor
☝️ Brad Hogg b Taylor
Jerome Taylor, who celebrates his 36th birthday today, took a match-winning hat-trick against Australia in the 2006 ICC Champions Trophy ???? pic.twitter.com/cDO7c95Fz3