32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பது ஜூன் மாதம் தெரிய வரும்.
இந்த நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றிரவு நடந்தது.
இதன்படி அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. 5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அந்த அணியில் உள்ள மற்ற அணிகளாகும். ‘ஏ’ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, தகுதி சுற்று அணி, ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து, ‘டி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, தகுதி சுற்று அணி, ‘இ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், தகுதி சுற்று அணி, ‘எப்’ பிரிவில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, ‘எச்’ பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
2ஆவது ஆட்டத்திலும் தோல்வி ஏன்? சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
முக்கியமான கடைசி 2 ஓவர்களை வீசுவதற்கு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் போனது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் 2 ஆட்டங்களில் சென்னை அணி தோற்றது இதுவே முதல்முறையாகும்.
தோல்விக்கு பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பேட்டியில் ‘ஆரம்பகட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடியாத நிலை தான் இருந்தது. ஏனெனில் அந்த அளவுக்கு ஈரப்பதம் இருந்ததால் பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு ‘கிரிப்’ கிடைக்காமல் சிரமப்பட்டோம்.
பனியின் தாக்கத்தால் பீல்டிங் செய்வதும் கடினமாக இருந்தது என்றார்.
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் பைனல்:
நடுவராக இந்தியப் பெண்
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர்கள் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமை ஆந்திராவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமிக்கு உண்டு. ஏற்கனவே ஆண்களுக்கான ஒரு நாள் போட்டியில் இதே பணியை செய்திருக்கிறார்.
ஆப்கன் அணியின் பயிற்சியாளரான பாக்., முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமர்குல் 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏப்ரல் 4-ந் தேதி அணியில் இணைவார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
KKR vs PBKS highlights: சிக்ஸர் மழை பொழிந்த ரசல்… கொல்கத்தா அபார வெற்றி!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான உடன்படிக்கையின்படி, உமர்குல் அணியுடன் மூன்று வார காலம் பணியாற்றுவார். அவரது பணி திருப்திகரமாக இருந்தால் அவரது பதவிகாலம் நீட்டிக்கப்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“