scorecardresearch

ஆஸி., வீரர் காயம்.. முதல் ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்த வீரர்! மேலும் செய்திகள்

வேகப்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார், ‘யார்க்கர்’ வீசுவதில் கில்லாடியான டி.நடராஜன், இளம் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸி., வீரர் காயம்.. முதல் ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்த வீரர்! மேலும் செய்திகள்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்க்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்க்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் வலியால் துடித்த அவருக்கு காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும் மிட்செல் மார்ஷ் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

தற்போதைய நிலைமையை பார்க்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மிட்செல் மார்ஷ் ஆடுவது கடினமானதாகும் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

முதல் ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்த ஐபிஎல் வீரர்

ஐபிஎல் போட்டித் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லக்னெள, குஜராத் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

லக்னெள அணியில் ஆயுஷ் பதோனி என்ற இளம் வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.

இதுதான் இவருக்கு அறிமுக ஆட்டமாகும். முதல் ஆட்டத்திலேயே 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். எனினும், அவரது அணி தோல்வியைத் தழுவியது.

‘பார்முலா 1’ கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி

‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான சவூதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

308.45 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 24 நிமிடம் 19.293 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரீ அணி) 2-வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (பெராரீ அணி) 3-வது இடத்தையும் பெற்றனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்த சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரி போட்டி ஏப்ரல் 10-ந் தேதி நடக்கிறது.

ஐதராபாத்-ராஜஸ்தான் இன்று மோதல்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் கிளைன் பிலிப்ஸ், நிகோலஸ் பூரன், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரவிகுமார் சமார்த் ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்ககூடியவர்கள்.

வேகப்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார், ‘யார்க்கர்’ வீசுவதில் கில்லாடியான டி.நடராஜன், இளம் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனியும், சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலும் உள்ளனர்.

இரண்டு அணிகளும் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

GT vs LSG Highlights: லக்னோவை வெளுத்தி வாங்கிய குஜராத்… 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

இதில் 8-ல் ஐதராபாத்தும், 7-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sports round up interesting tamil sports news