scorecardresearch

முதல் முறையாக களம் காணும் ஐபிஎல் அணிகள்.. ஓய்வு எப்போது? மிதாலி ராஜ் விளக்கம்.. மேலும் செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட 28 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 26ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும்-கொல்கத்தாவும் மோதின.

இதில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, நேற்று மும்பை-டெல்லி அணியும், பஞ்சாப்-பெங்களூரு அணியும் மோதின.

5 முறை சாம்பியனான மும்பை அணி அதிக ரன்களை எடுத்தும் டெல்லியிடம் சரணடைந்தது. இதேபோல் பெங்களூரு அணியும் 205 ரன்கள் எடுத்து அசத்தியிருந்த நிலையிலும் அந்த இலக்கை பஞ்சாப் அணி விரட்டி பிடித்து சாதித்தது.

இதுவரை ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 10 அணிகள் விளையாடுகிறது.

புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குஜராத் அணியை ஹார்திக் பாண்டியாவும், லக்னெள அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்துகின்றனர்.

குஜராத்தில் சுபமான் கில், ரித்திமான் சாஹா, டேவிட் மில்லர் என வலுவான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

லக்னெள அணியிலும் குவின்டம் டி காக், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, கிருணால் பாண்டியா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அறிமுக அணிகளான இரு அணியும் இன்று முதல் முறையாக களத்தில் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரனடாவில் நடந்தது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரனடாவில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 204 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 297 ரன்னும் எடுத்தன.

அடுத்து 93 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை படுமந்தமாக ஆடிய இங்கிலாந்து 60.4 ஓவர்களில் 120 ரன்னில் அடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் கைல் மேயர்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 28 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி ரிச்சர்ட்ஸ்-போத்தம் கோப்பையை வசப்படுத்தியது. முதல் இரு டெஸ்டுகள் டிராவில் முடிந்தன.

இந்தத் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாிடய கிரெய்க் பிராத்வைட் தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி டெஸ்டில் சதம் பதிவு செய்த ஜோஷுவா டா சில்வா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

தோல்விக்கு பிறகு மிதாலி ராஜ் கருத்து

12ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

இதன் பிறகு கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், முக்கியமான இந்த ஆட்டத்தில் எங்களது வீராங்கனைகள் தங்களால் முடிந்த முழு பங்கினை வழங்கினர். இரு அணிக்குமே இந்த ஆட்டம் சிறப்பானதாக அமைந்தது.

தொடக்கத்தில் தோற்ற நிலையில் இவ்வளவு தூரம் மீண்டும் வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அனுபவம் வாயந்த ஜூலன் கோஸ்வாமி காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பின்னடைவுதான்.

தோல்வியால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளோம். ஓய்வு குறித்து முடிவு செய்வதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறினார் மிதாலி ராஜ்.

இவருக்கு 39 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு ரீதியிலான கால்பந்தாட்டம்- பெலாரஸிடம் வீழ்ந்தது இந்தியா

நட்பு கால்பந்து போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியிடம் இந்திய கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் ஜூன் மாதம் ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கும்ப்ளே வழங்கிய அறிவுரையை பின்பற்றிய மும்பை வீரர் முருகன் அஸ்வின்

இதில் விளையாடவுள்ள இந்திய அணி, இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில், பக்ரைன் சென்று அங்கு இரண்டு நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.

தனது முதல் போட்டியில் பக்ரைனிடம் தோற்றது. இந்நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில் பெலாரசிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sports round up news intresting sports news today