`பயோ செக்யூர்; 15 நாள் ஐசோலேஷன்!’ திறக்கப்படும் தடகள முகாம்கள்

முகாமுக்குச் செல்லும் அனைத்து விளையாட்டு வீரர்களும் பயணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் சுய-தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

Sports tamil news: கோவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த தேசிய விளையாட்டு முகாம்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான நடைமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தொடங்கியுள்ளது. மேலும், மறுதொடக்கம் செய்யப்பட்ட தேசிய முகாம்களில் பயிற்சி பெற விளையாட்டு வீரர்கள் முகாம்களில் சேருவதற்கு முன்பு 15 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

SAI செயலாளர் ரோஹித் பரத்வாஜ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, மே மாதம் நாடு முழுவதும் விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்கியது. இதன் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த குத்துச்சண்டை, தடகள மற்றும் பேட்மிண்டன் விளையாட்டுக்கான தேசிய முகாம்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் இப்போது சேரவுள்ளவர்களுக்கும், இதன்பின்னர் தொடங்கும் முகாம்களுக்கு பொருந்தும். பயிற்சி முகாம்களில் சேரும் புதிய பயிற்சியாளர்கள் தொடர்பான நடைமுறை மாற்றங்களையும் இந்த புதிய விதிகள் கொண்டுள்ளது. அதேபோல், வைரஸ் அச்சுறுத்தலைச் சமாளிக்க SAI சில நடவடிக்கைகளை எடுத்டுள்ளது. அதன்படி,

குறைந்த காற்றோட்டம் கொண்ட அறைகளை நீக்குதல், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பயிற்சி உபகரணங்களை கிருமி நீக்கம் செய்தல், ஷிப்டுகளின் அடிப்படையில் ஜிம்களைப் பயன்படுத்துதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பயிற்சி முகாம்களில் சேருவதற்கு முன்பு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து COVID-19 சோதனைகளின் செலவை ஏற்பதாகவும், இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முகாமுக்குச் செல்லும் அனைத்து விளையாட்டு வீரர்களும் பயணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் சுய-தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவார்கள். மேலும், அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் COVID-19 க்கான கட்டாய RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மையங்களுக்குச் செல்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு, COVID-19 எதிர்மறை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே முகாமுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் தடகள, பயிற்சியாளர் அல்லது உதவி ஊழியர்கள் பயணம் செய்வதற்கு முன் சோதனைக்கு உட்படுத்த முடியாவிட்டால், அவர்கள் உடனடியாக ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மூலம் சோதிக்கப்படுவார்கள். இதுபோக, அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முகாம்களுக்கு வந்தவுடன் ஒரு வாரம் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இதன்பின், தனிமைப்படுத்தப்பட்ட 6 வது நாளில் ஆர்டி-பி.சி.ஆர் மூலம் மீண்டும் கொரோனா சோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதன்பின் வீரர்கள் பயோ செக்யூர் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports tamil news sports authority of india coronavirus guidelines

Next Story
ஓய்வு பெற்றாலும் நம்பர் 1 தான்; பாய்ந்து கேட்ச் செய்த ஜாண்டி ரோட்ஸ் வீடியோJonty Rhodes, Jonty Rhodes catched ball, number 1 fielder Jonty Rhodes, ஜாண்டி ரோட்ஸ், ஜாண்டி ரோட்ஸ் கேட்ச், வைரல் வீடியோ, ஐபிஎல், கிங்ஸ் 11 பஞ்சாப், Jonty Rhodes catch viral video, fielding practice of kings 11 pubjab,ipl series
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com