ஆசியாவில் எவரும் தொடாத உயரம்… விராட் ‘சாதனை’யை பாருங்க!

Virat Kohli gets 100 million followers in insta tamil news: இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் ஆசிய பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார்

Sports tamil news Virat Kohli tamil becomes first Asian celebrity to have 100 million followers on Instagram
Sports tamil news Virat Kohli tamil becomes first Asian celebrity to have 100 million followers on Instagram

Sports tamil news: நேற்று திங்கள் கிழமை, இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் ஆசிய பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார். அவரைத் தொடர்ந்து, 60.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், 58 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஷ்ரத்தா கபூரும் உள்ளனர்.

இது குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைத் பெற்ற முதல் கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தான்’ என்று பதிவிட்டுள்ளது.இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் 266 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் போர்த்துகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்திலும், 224 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் பாடகி அரியானா கிராண்டே 2ம் இடத்திலும், 220 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஓய்வுபெற்ற குத்துச் சண்டை (WWE) வீரர் மற்றும் ஹாலிவுட் பிரபலம் டுவைன் ஜான்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களில் டாப்-5 விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் உள்ளனர். இன்ஸ்டாகிராம் ஒட்டுமொத்த பின்தொடர்பவர்கள் டாப்-10 பட்டியலில் கேப்டன் கோலி 6 வது இடத்தில் உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் அதிக பின்தொடர்பவர்களை கேப்டன் கோலி பெற்றிருக்கவில்லை, மாறாக அவருக்கு ட்விட்டரில் 40.8 மில்லியன் பின்தொடர்பவர்களும், பேஸ்புக்கில் 36 மில்லியனுக்கும் அதிகமான லைக் கொடுப்பவர்களும் உள்ளனர். அதோடு இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களிடமிருந்து 100 மில்லியனுக்கு ஒரே வருடத்தில் நகர்ந்துள்ளார். மற்றும் பிப்ரவரி 2020 இல் இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கேப்டன் கோலி.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வரும் கேப்டன் கோலி,
சமீபத்தில் வெளியிடப்பட்ட மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இந்தி திரைப்பட நடிகர்களான அக்‌ஷய் குமார் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் உள்ளனர்.

மிகவும் மதிப்புமிக்க முதல் பத்து பிரபலங்களில், கேப்டன் கோலி மட்டுமே விளையாட்டு துறையை சேர்ந்தவராக உள்ளார். மற்ற 9 இடங்களில் உள்ளவர்கள் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள். அதில் இருவர் மட்டுமே பெண்கள்.

“முதல் 20 பிரபலங்கள் தங்களின் ஒருங்கிணைந்த மதிப்பில் 5 சதவீதத்தை 2020 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலராக இழந்தனர். கோலியின் பிராண்ட் மதிப்பு மட்டும் அப்படியே உள்ளது” என்று பிராண்ட் மதிப்பீட்டில் நிபுணத்துவம் பெற்ற டஃப் & பெல்ப்ஸ், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports tamil news virat kohli tamil becomes first asian celebrity to have 100 million followers on instagram

Next Story
இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்!Cricket news in tamil Rohit Sharma and Chris Gayle Who Can Score A Double-Century In A T20 Match says Nicholas Pooran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com