டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி திடீர் ராஜினாமா

Sports Update IN Tamil : நீண்ட காலத்திற்கு எனது அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,

Tamil Sports Update : சமீபத்தில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட்கோலி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனி கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது  திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இளம் வீரர் விராட்கோலி பதவியேற்றார். இதனையடுத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட்கோலி தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்படி டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகிய நிலையில், ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் விராட்கோலிக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்ட நிலையில், விராட்கோலி நீக்கத்திற்கு பல முன்னாள் வீரர்கள கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடந்த 7 ஆண்டுகளாக அணியை சரியான திசையில் கொண்டு செல்வதற்காக கடின உழைப்பு, மற்றும் இடைவிடாத விடாமுயற்சியும் செய்திருக்கிறேன. நான் எனது பணயை முழு நேர்மையுடன் செய்தேன், ஒவ்வொரு விஷயமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும், அதுபோலத்தான் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இந்த பணியும்.  இந்த 7 வருட பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் இருந்துள்ளன, ஆனால் முயற்சியின்மை அல்லது நம்பிக்கையின்மை இருந்ததில்லை.  நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீத உழைப்பை வழங்குவதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்,

என்னால் ஒன்றை செய்ய முடியாவிட்டால், அது சரியான காரியம் அல்ல என்பது எனக்குத் தெரியும். எனது இதயத்தில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது, மேலும் எனது அணிக்கு நான் நேர்மையற்றவராக இருக்க முடியாது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு எனது அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்திய இந்த வாகனத்தின் எஞ்சின் பின்னால் இருந்த ரவி பாய் மற்றும் ஆதரவுக் குழுவிற்கு, நன்றிக்கடன் பட்டுள்ளேன். கடைசியாக, என்னை ஒரு கேப்டனாக நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனிநபராக என்னைக் கண்டறிந்த எம்எஸ் தோனிக்கு நன்றி என கூறியுள்ளார்.

இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்ற பெருமை மிகு கேப்டனாக உள்ள விராட்கோலி, தனது கேப்டன்சியில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றதில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. சமீபத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports update indian cricket virat kohli steps down as test captain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com