களைக்கட்டும் ஐபிஎல் திருவிழா: ஸ்பான்சர்களை குவிக்கும் ஜியோஸ்டார்; விரிவான பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் மார்ச் 22-ந் தேதி தொடங்கி மே 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் மார்ச் 22-ந் தேதி தொடங்கி மே 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
IPL Cricket 2025

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் மார்ச் 22-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியை ஒளிபரப்ப தயாராகும் ஜியோஸ்டார், 20 முக்கிய பிராண்டுகளுடன் ஸ்பான்சர் குழுமைத்தை உருவாக்கியுள்ளது. இதில் மை 11 சர்கிள்(My11Circle), சம்பா எனர்ஜி (Campa Energy), பிர்லா ஓபஸ் ( Birla Opus), போகர் பாஸி (PokerBaazi), எஸ்.பி.ஐ போன்பே (SBI, PhonePe)  மியூச்சல் ஃபாண்ட் சஹி ஹாய் (Mutual Funds Sahi Hai), தம்ஸ்அப் (Thums Up), கூகுள் சர்ச் (Google Search), ஆலன் சோலி (Allen Solly) ஜாகுவார் பாத் + லைட் ( Jaquar Bath + Light), ஜிபே (GPay), கென்ட் குள் பேன்ஸ் ( Kent Kuhl Fans), ட்ரீம் 11 (Dream11) சாம்பா (Campa), ஜாய் காஸ்மெட்டிக் (Joy Cosmetics), டிவிஎஸ் (TVS) ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) ஜூபி (Zupee) மற்றும் அமுல் (Amul) உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இது குறித்து ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரெவின்யூ, எஸ்.எம்.பி (SMB) & கிரியேட்டர் தலைமை வணிக அதிகாரி இஷான் சட்டர்ஜீ கூறுகையில், ஐ.பி.எல் ஒரு விளையாட்டு நிகழ்வை மீறி இந்தியாவின் கலாச்சார அசைவாக மாறியுள்ளது. இது ரசிகர்களையும் பிராண்டுகளையும் பிரமாண்ட அளவில் ஒருங்கிணைக்கிறது. 2025 சீசனுக்குத் தயாராகும் நிலையில், மேம்பட்ட விளம்பர நவீனத்தொடர்களும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களை இணைக்கும் சரிவிகித அணுகுமுறையுடன், எங்கள் ஸ்பான்சர்களுக்கு அதிக தாக்கமும் பெறுமதிப்பையும் வழங்குவதை உறுதி செய்கிறோம். இந்த புதிய அம்சங்கள், ரசிகர்கள் அனுபவத்தை வெகுவாக உயர்த்தும் என்று கூறியுள்ளார்.

ஜியோஸ்டார் பல்வேறு அதிநவீன விளம்பர நவீனத்தொடர்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏ.ஐ.(AI)-ஆதரித்த பிரேஷன் டார்கெட்டிங், இன்டராக்டிவ் அட் ஃபார்மேட்கள், பல்மொழி ஒளிபரப்பு மற்றும் குறும்பட இணைப்பு ஆகியவை அடங்கும். பிராண்டு ஸ்பாட்லைட் (Brand Spotlight) (முதல் 5 ஓவர்களில் பிரத்யேக இடைவெளிகள்), சி.ஜி.ஐ ( CGI-Led Live Interventions, Scannable Action Replay) மற்றும் ஸ்டார் டீல்ஸ் (Star Deals) மூலம் இன்டராக்டிவ் விளம்பர தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

IPL 2025 மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. இது உலகின் சிறந்த திறமையாக கிரிக்கெட் வீரர்களை ஒரே மேடையில் கொண்டுவரும் பரபரப்பான தொடர்களில் ஒன்றாக அமைந்துள்ளது, இந்த தொடர் ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் அபாரமான அணுகலை வழங்கும் ஐபிஎல் 2025, பிராண்டுகளுக்கு அதிக ரசிகர்கள் ஈடுபாட்டை உருவாக்கவும், ஆழமான மக்கள்தொடர்புகளை அமைக்கவும் ஒரு பிரமாண்ட வாய்ப்பாக இருக்கும்.
கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில், IPL 2025 ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களையும், விளம்பரதாரர்களுக்கு முன்னணி வணிக வளர்ச்சி வாய்ப்புகளையும் வழங்க தயாராக உள்ளது.

Ipl Indian Premiere League

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: