Advertisment

அடுத்த நீரஜ் சோப்ரா… பயிற்சியே இல்லாமல் சிறுவன் சாதனை!

15-year-old javelin thrower Rohan Yadav training video goes viral in the internet Tamil News: பெரியதாக எந்த கட்டுமான வசதியும் இல்லாத அந்த ஊரில், 15 வயது சிறுவனின் சமீபத்திய 'ஈட்டி எறிதல்' பயிற்சி வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Jan 20, 2022 14:29 IST
Sports viral Tamil News: Next Neeraj Chopra, 15-year-old Rohan Yadav Throwing Javelin video goes viral

Sports viral Tamil News: 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் களமிறங்கிய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் அவர், 2008ல் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய தனிநபர் தடகள வீரர் மற்றும் வரலாற்றில் இரண்டாவது வீரர் என்கிற பெருமையும் பெற்றார். அவரின் இந்த வெற்றி தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைத்துள்ளது.

Advertisment
publive-image

நீரஜ் சோப்ரா

மேலும், இந்தியாவில் பெரிய அளவில் எந்த அங்கீகாரமும் பெறாத இந்த 'ஈட்டி எறிதல்' விளையாட்டு தற்போது நாடும் முழுதும் பேசப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை தங்களது எதிர்காலமாக் கருதிய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கமும் கிடைத்துள்ளது. தவிர, இந்த விளையாட்டில் பயிற்சி பெற துடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

publive-image

நீரஜ் சோப்ரா

ட்விட்டர் வைரல்

அந்த வகையில், ஈட்டி எறிதல் விளையாட்டை தனது சொந்த ஊரில் இந்த இளம் வீரர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பெரியதாக எந்த கட்டுமான வசதியும் இல்லாத அந்த ஊரில் இவரின் சமீபத்திய 'ஈட்டி எறிதல்' பயிற்சி வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மைக்கேல் முசெல்மேன் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இளம் வீரர் ரோஹன் யாதவ் தனது கிராமத்தில் ஈட்டி எறிதல் பயிற்சி மேற்கொள்கிறார். சரியான பயிற்சி வசதிகள் இல்லாத போதிலும், இளம் வீரர் ரோஹன் 800 கிராம் ஈட்டியுடன் 65 மீ தூரம் எறிகிறார்.

முன்னாள் பயிற்சியாளர் புகழாரம்

இந்த வீடியோவை வெளியிட்ட மைக்கேல், ரோஹனை இந்தியாவில் உள்ள ‘மிகப்பெரிய திறமைசாலி’களில் ஒருவர் என்றும், அவர் வீசிய தூரம் அவரை உலகின் முதல் 10 U18 ஈட்டி எறிதல் வீரர்களில் இடம்பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது என்றும் கூறினார். மேலும், ரோஹனின் பயிற்சியை தொடர்ந்து கவனிக்குமாறு இந்திய தடகள கூட்டமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, ரோஹனின் பயிற்சிக்கு உதவக்கூடிய நபர்கள் அல்லது ஸ்பான்சர்களுடன் இணைக்க உதவுமாறு மைக்கேல் நெட்டிசன்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீரருக்கு முறையான பயிற்சி அளித்தால், 4-6 ஆண்டுகளில் அடுத்த சோப்ராவாக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் பல பாராட்டுக் கருத்துகளைப் பெற்றுள்ளது.

முன்னாள் ஈட்டி எறிதல் பயிற்சியாளரான மைக்கேல் முஸ்ஸல்மேன், இந்திய ஈட்டி எறிதல் முயற்சியின் இணை நிறுவனர் ஆவார். இந்த விளையாட்டில் இளம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் ஊக்குவித்து வருகிறார். இளம் வீரர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல இந்த அமைப்பு கடந்த 2016 முதல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral Video #Sports #Olympics #Viral #Tokyo Olympics #Javelin Throw #Japan #Neeraj Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment