T20 World Cup 2022: India vs New Zealand; Warm Up Match highlights Tamil News: 8 – வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடருக்கு முன்னதாக தகுதிச் சுற்றுப்போட்டிகளும், பயிற்சி ஆட்டங்களும் நடந்து வருகின்றன. அவ்வகையில், இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ராகுல் (57), சூர்யகுமார் யாதவ் (50) அரைசதம் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த முகமது ஷமி ஒரே ஓவரில் 4 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில் பிரிஸ்பேனில், இன்று நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால், அங்கு தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா (கேப்டன் ), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா , ரிஷப் பந்த்
நியூசிலாந்து அணி:
டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil