Advertisment

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சென்னையில் இன்று தொடக்கம்

ஸ்குவாஷ் உலகக் கோப்பையின் தொடக்க விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Squash World Cup 2023 begins from today in Chennai Tamil News

Tamilnadu Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin and (WSF) president Zena Wooldridge, present at Squash World Cup opening ceremony.

Squash World Cup 2023 Chennai Tamil News: 4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் தமிழகத்தின் தலைநகர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 17ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா உள்பட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அதன்படி, 'ஏ' பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா ஆகிய 4 அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய 4 அணிகளும் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இன்றைய ஆட்டம்

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-தென்ஆப்பிரிக்கா (காலை 10.30 மணி), எகிப்து-ஆஸ்திரேலியா (பகல் 1 மணி), மலேசியா-கொலம்பியா (மாலை 3.30 மணி), இந்தியா-ஹாங்காங் (மாலை 6 மணி) மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 2 வீரர், 2 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு போட்டியும் 4 ஆட்டங்கள் கொண்டதாகும். இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் நாளை தென்ஆப்பிரிக்காவையும் (மாலை 6 மணி), நாளை மறுநாள் ஜப்பானையும் (மாலை 6 மணி) எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், தன்வி கண்ணா ஆகிய முன்னணி வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியில் வலுவான எகிப்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர் சவுரவ் கோஷல் பேசுகையில், 'உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவோம். நாங்கள் எங்களது திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்தினால் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம்' என்றார்.

இந்த போட்டியின் தொடக்க விழா மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment