Ipl 2021, SRH vs CSK match highlights: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று வியாழக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய களம் கண்டது.
அணிக்கு வலுவான ரன்களை சேர்க்க முயன்ற ஜேசன் ராய் – விருத்திமான் சாஹா ஜோடியில் ஜேசன் ராய் 2 ரன்னுடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். இவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகளை விரட்டிய நிலையில் lbw முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் நீண்ட நேரம் ஆடிய தொடக்க வீரர் விருத்திமான் சாஹா ஜடேஜாவின் சுழலில் சிக்கி (46 பந்துகளில் 44 ரன்கள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட) அவுட் ஆனார்.
தொடர் விக்கெட் சரிவை சந்தித்து வந்த ஐதராபாத் அணி ரன் சேர்க்க தடுமாறி வந்தது. இந்த தருணத்தில் களத்தில் இருந்த அபிஷேக் சர்மா – அப்துல் சமத் ஜோடி தலா 1 சிக்ஸர் 1 பவுண்டரிகளை விளாசி வலுவான பட்னர்ஷிப்பை அமைத்தது. இந்த ஜோடியை உடைக்க நினைத்த கேப்டன் தோனி ஜோஷ் ஹேசில்வுட்டை பந்து வீச அழைத்தார்.
கேப்டனின் நம்பிக்கையை வீணடிக்காத ஹேசில்வுட் அவர் வீசிய 17வது ஓவரிலேயே இருவரது விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டினார். இவரை தொடர்ந்து பந்து வீச வந்த ஷர்துல் தாக்கூரும் தனது பங்கிற்கு அதிரடி வீரர் ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்தது.
பந்து வீச்சில் தொடக்கம் முதலே மிரட்டிய சென்னை அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியில் 38 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரி என அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மொயீன் அலி 17 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் (36 பந்துகளில் 41 ரன்கள், 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட) ரெய்னா வீழ்ந்த 16வது ஓவரிலே ஆட்டமிழந்தார்.
எனினும், இவர்களது விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த அம்பதி ராயுடு (17) – கேப்டன் தோனி (14) ஜோடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது. தலா 1 பவுண்டரி 1 சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்த ஜோடி 2 பந்துகள் மீதம் இருக்க அணியின் வெற்றியை உறுதி செய்தது. மேலும் கேப்டன் தோனி தனது பாணியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
Wintage THALA 💥🥳#SRHvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/7K8SCzivnv
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
We are BACK…#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/5aXhx08hUE
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
Indian Premier League, 2021Sharjah Cricket Stadium, Sharjah 20 August 2022
Sunrisers Hyderabad 134/7 (20.0)
Chennai Super Kings 139/4 (19.4)
Match Ended ( Day – Match 44 ) Chennai Super Kings beat Sunrisers Hyderabad by 6 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. கேப்டன் தோனி தனது பாணியில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Rasiganai vellum Thalaivane 💛#srhvcsk #whistlepodu #yellove 🦁💛 pic.twitter.com/EHj5Qk4jdU
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
Mahendra Baahubali Stands Tall! 🥳#srhvcsk #whistlepodu #yellove 🦁💛 pic.twitter.com/p2SmmyXfZV
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
.@ChennaiIPL march into the #vivoipl Playoffs! 👏 👏The @msdhoni-led unit beats #srh & becomes the first team to seal a place in the playoffs. 👌 👌 #vivoipl #srhvcskScorecard 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/78dMU8g17b
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 22 ரன்கள் தேவை.
ஐதராபாத் அணிக்கு எதிராக 135 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை சேர்த்துள்ளது.
135 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி களமிறங்கியுள்ளது.
அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி 4 ஓவர்கள் முடிவில் 27 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்கம் முதலே பந்து வீச்சில் மிரட்டி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி 134 ரன்களை சேர்த்திருந்தது.
INNINGS BREAK! 3⃣ wickets for Josh Hazlewood2⃣ wickets for @DJBravo47 4⃣4⃣ for @Wriddhipops The @ChennaiIPL chase will begin shortly. #vivoipl #srhvcskScorecard 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/Y5Cuks24SU
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள ஐதராபாத் அணி 16 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் சேர்த்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (2 ஆண்டு தடை தவிர) வழிநடத்தி வரும் அந்த அணியின் கேப்டன் தோனி இன்றைய ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது என்னெவென்றால் ஒரே ஐ.பி.எல். கிரிக்கெட் அணிக்காக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனை தான் அது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் தோனி 100 வது கேட்சை பிடித்து அசத்தியுள்ளார்.
(C) Dhoni X 100!😍#srhvcsk #whistlepodu #yellove 🦁💛 pic.twitter.com/vsRr4xesr1
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 12 ஓவர்கள் முடிவில் அந்த அணி 73 ரன்களை மட்டும் சேர்த்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை சேர்த்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜேசன் ராய் விக்கெட்டுக்கு பிறகு களம் கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் lbw அவுட் ஆனார்.
L. B. W! ☝️@DJBravo47 strikes in his first over as @ChennaiIPL pick the second #srh wicket. 👍 👍Kane Williamson departs. #vivoipl #srhvcskFollow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/sO17HHxwJ4
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீசி வரும் நிலையில், பேட்டிங் செய்ய களம் கண்ட ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்னுடன் நடையை கட்டினார்.
Josh Hazlewood gets Wicket No.1️⃣ for @ChennaiIPL 💛Jason Roy walks back and SRH are 30/1 in 4.2 overs 👍🏻#vivoipl #srhvcskFollow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/VxVcqbVm86
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய களம் கண்டுள்ளது. அந்த ஜேசன் ராய் – விருத்திமான் சாஹா ஜோடி தொக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
Inching closer to the LIVE action! 😎The stage is set. 👌 👌3⃣, 2⃣, 1⃣ & HERE WE GO! 👍 👍 #vivoipl #srhvcsk @SunRisers @ChennaiIPL Follow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/UI3zEzkulu
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (விளையாடும் லெவன்):
ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்):
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
Team News@SunRisers remain unchanged. 1⃣ change for @ChennaiIPL as @DJBravo47 returns to the team. #vivoipl #srhvcskFollow the match 👉 https://t.co/QPrhO4XNVrHere are the Playing XIs 🔽 pic.twitter.com/Rwu3jGxYAN
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (விளையாடும் லெவன்):
ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்):
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
🚨 Toss Update from Sharjah 🚨@ChennaiIPL have elected to bowl against @SunRisers. #vivoipl #srhvcskFollow the match 👉 https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/2DjvLhU1dx
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
நடப்பாண்டு சீசனில் தொடர் வெற்றிகளால் பட்டையை கிளப்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், 2-வது கட்ட சீசனில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத (தொடர்ந்து 3 வெற்றி) ஒரே அணியாக சென்னனை அணி வலம் வருகிறது.
சார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்திற்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மைதானம் வந்து சேர்ந்தது.
We are off ➡️ 🏟️Ready to #whistlefromhome? 🥳#srhvcsk #whistlepodu #yellove 🦁💛 pic.twitter.com/i9UGIaNv5k
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
இன்றைய ஆட்டம் நடக்கும் சார்ஜா மைதானம் வழக்கத்தை விட மிகவும் மந்தமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு இங்கு ரன் மழை பொழியப்பட்டது. ஆனால் தற்போது ஆடுகளம் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் அதன் தன்மை மெதுவாக உள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் தகிடுதத்தம் போடுகிறார்கள்.
இங்கு, கடந்த இரு ஆட்டங்களில் எந்த அணியும் 130 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அதனால் 150 ரன்களே இந்த மைதானத்தில் சவாலான இலக்காக இருக்கும். ஆடுகளத்தன்மைக்கு தகுந்தபடி விளையாடுவது வெற்றியை தீர்மானிக்கும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றிரவு 7:30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
Hello & welcome from Sharjah for Match 44 of the #vivoipl 👋Kane Williamson's @SunRisers square off against the @msdhoni-led @ChennaiIPL in what promises to be a cracking contest. 👌 👌 #srhvcsk Which team are you rooting for tonight❓ 🤔 🤔 pic.twitter.com/2JjB8wjnnp
— IndianPremierLeague (@IPL) September 30, 2021