Advertisment

IPL 2024 SRH vs CSK Highlights : சி.எஸ்.கே போராட்ட் வீண் : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் சன் ரைசஸ அணியுடன் மோதியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs SRH 2024

சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai Super Kings vs Sunrisers Hyderabad IPL 2024 Live Score: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – சன் ரைசஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டி ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

Advertisment

SRH vs CSK Live Score

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா – ருத்துராஜ் கெய்க்வாட் இன்னிங்சை தொடங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரவீந்திரா 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே ருத்துராஜூடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 54 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. நிதானமாக விளையாடிய ருத்துராஜ், 21 பந்துகளில் 3 பவுண்ரி ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிபம் டூபே தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அரைசதத்தை நெருங்கிய டூபே, 24 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ரஹானே ஆட்டமிழந்த நிலையில், டேரல் மீச்செல் 11 பந்துகளில் 13 ரன்கள் குவித்து வெளியேறினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 23 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 31 ரன்களும், தோனி ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் அணி தரப்பில், நடராஜன், புவனேஷ்வர், கம்மின்ஸ், ஷபாஸ் அகமது, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக தொடக்கம் முதலே சிக்சர்களாக விளாசிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ஹெட்டுன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.

இந்த ஜோடியின அதிரடி ஆட்டம் காரணமாக ஐதராபாத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ரன்களிலும், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த மார்க்ரம் 35 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

க்ளாசன் 10 ரன்களுடனும், நித்தீஷ் ரெட்டி 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் விழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 05, 2024 21:56 IST
    6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 78/1

    தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 24 ரன்களுடனும், மார்க்ரம் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • Apr 05, 2024 21:42 IST
    அபிஷேக் சர்மா அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்த தீபக் சஹார்

    166 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே அபிஷேக் சர்மா அதிரடியில் இறங்கியதால், 3 ஓவர்களில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 



  • Apr 05, 2024 20:41 IST
    அரைசதத்தை மிஸ் செய்த டூபே

    தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஷிவம் டூபே, 24 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது சென்னை அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 05, 2024 20:08 IST
    ருத்துராஜ் கெய்க்வாட் அவுட்

    8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 16 ரன்களுடனும், டூபே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ருத்துராஜ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 



  • Apr 05, 2024 19:48 IST
    ரச்சின் ரவீந்திரா அவுட்

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 4 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 9 பந்துகளில் 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



  • Apr 05, 2024 19:17 IST
    சென்னை அணியில் மாற்றம்

    சென்னை அணியில், முஸ்தாபிசூர் ரஹ்மான் நாட்டுக்கு திரும்பியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக மொயின் அலி, பத்திரானாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக மகேஷ் தீக்ஷனா, சமீர் ரிஸ்வி இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Apr 05, 2024 19:04 IST
    சி.எஸ்.கே பேட்டிங்

    டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது 



  • Apr 05, 2024 18:14 IST
    ஐதராபாத் மைதானத்தில் டாஸ் முக்கியத்துவம் பெறுமா?

    ஐதராபாத் மைதானத்தில் கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில், டாஸ் வென்ற அணி 6 முறை வெற்றியும் 4 முறை தோல்வியும் கண்டுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்யும் அணி 5 முறை வெற்றியும் 5 முறை தோல்வியையும் சந்தித்துள்ளது. 



  • Apr 05, 2024 18:11 IST
    சென்னை vs ஐதராபாத் நேருக்கு நேர்

    சென்னை - ஐதராபாத் ஆகிய இரு  அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 14ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.



Csk Vs Srh IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment