/indian-express-tamil/media/media_files/2025/05/05/pHvmx1blHMaFYi0ovmnK.jpg)
ஐ.பி.எல் 2025: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், 55வது போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ஐதராபாத்.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு:730 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது. டெல்லி அணி பேட்டிங் செய்து முடித்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஐதராபாத் அணியின் பிளேஆஃப் கனவு கலைந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, SRH vs DC LIVE Cricket Score
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையேயான இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கருண் நாயர், ஃபாஃப் டுபிளெசிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியாக கருண் நாயர் பேட் கம்மின்ஸ் பந்தில் இஷான் கிஷண் இடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட் ஆனார். அடுத்தடுத்த ஓவர்களில் பேட் கம்மின்ஸ் ஃபாஃப் டுபிளெசிஸ் (3), அபிஷேக் பொரெல் (8) விக்கெட்டுளையும் வீழ்த்தினார். அடுத்து வந்த கே.எல். ராகுல் 10, அக்சர் படேல் 6 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
அதிரடியாக விளையாடிய அஷுதோஷ் ஷர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்தது.
ஆனால், இன்னிங்ஸ் இடைவேளையின்போது பெய்த கனமழை காரணமாக ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், மழை நின்ற பிறகும் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத அளவுக்கு மைதானத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதனால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த முடிவால் ஐதரபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ஐதராபாத் அணி தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் எனில் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேநேரத்தில், கடந்த 2 போட்டிகளில் தோல்வியுற்றுள்ள டெல்லி அணி அதிலிருந்து மீள கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.