Advertisment

SRH vs GT Highlights: மழை குறுக்கீடு : ஐதராபாத் - குஜராத் இடையேயான போட்டி ரத்து

ஐ.பி.எல். 2024 இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தது.

author-image
WebDesk
New Update
SRH vs GT Live Score IPL 2024 Match 66 today Sunrisers Hyderabad vs Gujarat Titans scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Sunrisers Hyderabad | Gujarat Titans: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தது.

Advertisment

டாஸ் போடுவதில் தாமதம்

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் கடைசிவரைக்கும் மழை நிற்காததால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 7 வெற்றி ஒரு முடிவில்லையுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 6 வெற்றி ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திற்கு முன்னேறியிருந்தாலும் ஏற்கனவே பளேஅப் வாய்ப்பை இழந்துவிட்டது குஜராத்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gujarat Titans Sunrisers Hyderabad IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment