/indian-express-tamil/media/media_files/2025/04/06/OeiKVwW2NNZbNtEyGfOQ.jpg)
IPL 2025, SRH vs GT Cricket Score: சன் ரைசர்ஸ் ஐதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் மொதல்
IPL 2025, SRH vs GT Score Updates: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சொந்த மைதானமான ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் குஜராத் டைட்டன் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதியது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 18-வது சீசனில் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்து வீச தேர்வு செய்தார். அதன்படி சன் ரைசர்ஸ் ஐதபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். முஹமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட்5 பந்துகளில் 8 ரன்கள் அடித்த நிலையில், சாய் சுதர்ஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இஷான் கிஷாண் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தபோது, 18 ரன்கள் அடித்திருந்த அபிசேக் சர்மா, முஹம்மது சிராஜ் பந்தில் ராகுல் திவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்ய வந்தார்.
இஷான் கிஷன் - நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி நிதானமாக விளையாடினர். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தபோது, 17 ரன்கள் அடித்திருந்த இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஹெயின்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது, 27 ரன்கள் அடித்திருந்த ஹெயின்ரிச் கிளாசென், சாய் கிஷோர் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து அனிகெட் வெர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தபோது, 31 ரன்கள் அடித்திருந்த நிதிஷ் குமார் ரெட்டி, சாய் கிஷோர் பந்தில், ரஷீத் கான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கமிண்டு மெண்டிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17.0 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தபோது, 1 ரன் மட்டுமே எடுத்த கமிண்டு மெண்டிஸ் பிரசித் கிருஷ்ணா பந்தில் சாய் சுதர்ஷன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது, 18 ரன்கள் எடுத்திருந்த அனிகெட் வெர்மா முஹம்மது சிராஜ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து சிமர்ஜீத் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.0 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது, சிமர்ஜீத் சிங் முஹம்மது சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து முஹம்மது ஷமி பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், அவர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 2.5 ஓவர்களில் சாய் சுதர்ஷன் 5 ரன் எடுத்த நிலையில் முஹம்மது ஷமி பந்தில் அனிகெட் வெர்மா விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர், பேட் கம்மின்ஸ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்த நிலையில், முஹம்மது ஷமி பந்தில் அனிகெட் வெர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் அடித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 61 ரன்களுடனும் ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த சீசனின் முதல் போட்டியில் ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருந்தபோதிலும், அடுத்த மூன்று போட்டிகளில் 200 ரன்களைக் கூட தாண்டவில்லை. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிப் பாதையில் இருக்கும் நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியைத் தழுவியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அதர்வா டைடே, அபிநவ் மனோகர், அனிகேத் வர்மா, சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் படேல், கமிண்டு மெண்டிஸ், வியாண் முல்டர், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனட்கட்.
குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பி. சாய் சுதர்சன், ஷாருக் கான், முகமது சிராஜ், டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, ராகுல் திவேதியா, விஜய் சங்கர், அஸ்மதுல்லா ஒமர்சாய், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது, சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், தர்ஷன் நல்கண்டே, ஸ்வப்னில் சிங், கார்த்திக் தியாகி, சுஷாந்த் மிஸ்ரா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.