SRH vs KKR Qualifier 2 - Live Cricket Score சன் ரைசர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் இங்கு காணலாம்!
SRH vs KKR Qualifier 2 - Live Cricket Score சன் ரைசர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ‘குவாலிஃபையர் 2 போட்டி இன்று (மே 25) கொல்கத்தாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே வருகிற ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல்-2018 கோப்பைக்கான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே புள்ளிகளைப் பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்தைப் பெற்றது. மும்பையில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சி.எஸ்.கே.!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ‘எலிமினேட்டர்’ சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. அடுத்தகட்டமாக 2-வது குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. சன் ரைசர்ஸ் அணி தொடக்கத்தின் தீவிரமாக செயல்பட்டாலும், கடைசி சில போட்டிகளில் ஜொலிக்கவில்லை. குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக 139 ரன்களையே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
பந்து வீச்சில் ஓரளவு பலமான அணியாக இருந்தாலும், பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சனை மட்டுமே நம்பியிருப்பது ஹைதராபாத்தின் பலவீனம்! தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஃபார்மில் இல்லாததும் பலவீனம்! பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ரஷீத்கான் ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங், பந்து வீச்சு ஆகியவற்றில் சரிவிகித பலம் வாய்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தொடக்கத்தில் சுனில் நரினின் அதிரடி, மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், ரஸ்ஸெல் ஆகியோரின் நிலையான ஆட்டம், பந்து வீச்சில் குல்தீப் யாதவின் சுழல் ஆகியவை கொல்கத்தாவின் பலம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்? என்பதை முடிவு செய்யும் இந்த ஆட்டத்தின் Live Cricket Score இங்கே!