Advertisment

SRH vs KKR IPL 2023: கடைசி ஓவரில் ஐதராபாத்தை அடக்கிய வருண்; 5 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
SRH vs KKR Live Score | IPL 2023 Live Score | Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Score

IPL 2023 நேரலை ஸ்கோர்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders IPL 2023 Live Score in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்; ஐதராபாத் பவுலிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம்( கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி நடராஜன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில், குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் , பின்னர் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர், நிதிஸ் ராணா , ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராணா 42 ரன்களில் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த ரசல் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடிய 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 171 ரன்கள் எடுத்து. ஹைதராபாத் சார்பில் மார்கோ ஜான்சன் , நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்களிலும், மயங்க் அகர்வால் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த, ராகுல் திரிபாதி 3 பவுண்டரிகளையும், 1 சிக்சரையும் பறக்கவிட்டு 20 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹாரி புரூக் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய மார்க்ரம் 41 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களில் கிளாசன் விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து, விக்கெட்டுகள் பறிபோன நிலையில், ஐதராபாத் அணிக்கு இறுதி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் மற்றும் புவனேஸ்வர் குமார் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி 20-வது ஓவரை வீசினார். கடைசி ஓவரின் 3-வது பந்தில் அப்துல் சமாத் 21 ரன் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Live Score Sunrisers Hyderabad Kolkata Knight Riders Srh Kkr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment