IPL 2023,SRH vs LSG Cricket Match Score In Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 58-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா (கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி
ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அன்மோல் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். அபிஷேக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிபாதி அதிரடியாக ஆடி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மார்க்ரம் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அன்மோல் 36 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளாசன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இந்தநிலையில், மறுமுனையில் ஆடிய மார்க்ரம் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பிலிப்ஸ் முதல்பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக கிளாசனுடன் சமத் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி விளாசிய கிளாசன் 47 ரன்களில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் களமிறங்கிய புவனேஷ்வர் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து ஹைதராபாத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் குருனால் பாண்டியா 2 விக்கெட்களையும், யுத்வீர், அவேஷ், யாஷ், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
லக்னோ பேட்டிங்
183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேயர்ஸ் மற்றும் டி காக் களமிறங்கினர். டி காக் அதிரடியாக ஆட, மேயர்ஸ் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். 14 பந்துகளைச் சந்தித்த மேயர்ஸ் 2 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மன்கட் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிவந்த டி காக் 29 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய மன்கட் அரைசதம் அடித்தார். 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்த ஸ்டாய்னிஸ் 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஹைதராபாத் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பூரன் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோ அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. மன்கட் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் பிலிப்ஸ், மார்கண்டே, அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
SRH vs LSG Highlights: ஸ்டாய்னிஸ், பூரன் அதிரடி; 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய லக்னோ
182 ரன்கள் அடித்த ஹைதராபாத்; ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.