IPL 2021, SRH vs MI match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 55-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மணீஷ் பாண்டே தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
🚨 Toss Update from Abu Dhabi 🚨@mipaltan have elected to bat against @SunRisers. #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/olIwIWqLmx— IndianPremierLeague (@IPL) October 8, 2021
அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார் இஷான் கிஷன். அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரிகளை விரட்டிய நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் தொடக்க வீரர் இஷான் கிஷனின் அதிரடியால் மும்பை அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் சேர்த்தது.
It's raining fours & sixes! 🔥 ⚡️@mipaltan zoom past fifty in 3.4 overs. 👌 👌@ishankishan51 is on a roll with captain @ImRo45 giving him good company. 👏 👏 #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/YvFqZZOgKU— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Man on a mission, Mr. @ishankishan51! 👏 👏
A 16-ball half-century for the @mipaltan left-hander. 🙌 🙌 #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/muvfkGd8mF— IndianPremierLeague (@IPL) October 8, 2021
பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸர் அடித்து 10 ரன்கள் சேர்த்து அவுட் ஆன நிலையில், மறுமுனையில் பவுண்டரி சிக்ஸர்களால் வானவேடிக்கை காட்டி அரைசதம் கடந்த இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் (4 சிக்ஸர், 11 பவுண்டரி) குவித்து உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
.@mipaltan going berserk in Abu Dhabi and how! 💪 💪
They race past hundred in 7.1 overs. ⚡️ ⚡️ #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/1i1DB24eIF— IndianPremierLeague (@IPL) October 8, 2021
8⃣4⃣ Runs
3⃣2⃣ Balls
1⃣1⃣ Fours
4⃣ Sixes
DO NOT MISS: @ishankishan51 went hammer & tongs and played a sensational knock to set the ball rolling for @mipaltan. ⚡️ ⚡️ #VIVOIPL #SRHvMI
Watch that stroke-filled innings 🎥 👇https://t.co/4GklGaTl5k— IndianPremierLeague (@IPL) October 8, 2021
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக ரன் வேட்டையை தொடர்ந்திருந்த நிலையில், அவருக்கு மறுமுனையில் களமாடிய கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், பியூஷ் சாவ்லா ஆகிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், தனி ஒருவரனாக அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார்.
A cracking half-century from SKY! 💪
The @mipaltan right-hander brings up his fifty in 24 balls - his fastest ever IPL half-century. 👏👏 #VIVOIPL #SRHvMI #MumbaiIndians zoom past 200.
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/sxqcm4dcFP— IndianPremierLeague (@IPL) October 8, 2021
மும்பை அணி வலுவான ஸ்கோரை எட்டிப்பிடிக்க தனது அதிரடியை தொடர்ந்து அவர் 19.4 வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 40 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 82 ரன்கள் குவித்தார்.
An outstanding batting display by @surya_14kumar 💥💥#VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/SK9va10XVU— IndianPremierLeague (@IPL) October 8, 2021
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்-வின் மிரட்டலான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் சொதப்பி ரன்களை வாரிக்கொடுத்த ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
INNINGS BREAK!
Sensational batting display from @mipaltan to post 235/9 on the board!
8⃣4⃣ for @ishankishan51
8⃣2⃣ for @surya_14kumar
4⃣/5⃣2⃣ for @Jaseholder98
The @SunRisers chase will begin shortly. #VIVOIPL #SRHvMI
Scorecard 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/K8cP0OPzs2— IndianPremierLeague (@IPL) October 8, 2021
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் பந்து வீச களமிறங்கியது. எனினும், ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே- ஆப் சுற்று கனவு தகர்ந்தது.
End of powerplay!
7⃣0⃣ runs for @SunRisers
1⃣ wicket for @mipaltan. #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/31dMcf1vg8— IndianPremierLeague (@IPL) October 8, 2021
ஐதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ஜேசன் ராய் 34 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 33 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்களில் ப்ரியம் கார்க் அதிகபட்சமாக 29 ரன்கள் சேர்த்தார். அணியை கரைசேர்க்க களத்தில் இறுதிவரை போராடிய கேப்டன் மணீஷ் பாண்டே 41 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளை விளாசி 69 சேர்த்தார்.
A solid half-century by @im_manishpandey in the run-chase 👏👏
His first 5️⃣0️⃣ as @SunRisers captain in the #VIVOIPL.
SRH 155/6 now. #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/vVUVAgsJ3T— IndianPremierLeague (@IPL) October 8, 2021
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் மும்பை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பியூஷ் சாவ்லா மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
.@mipaltan seal a 42-run win over #SRH! 👏 👏
A solid performance with the bat sets up a fine victory for the @ImRo45-led unit in Abu Dhabi. 👌 👌 #VIVOIPL #SRHvMI
Scorecard 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/Ted3wkiyQp— IndianPremierLeague (@IPL) October 8, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 00:03 (IST) 09 Oct 2021ஐதராபாத் அணியை வீழ்த்திய மும்பைக்கு ஆறுதல் வெற்றி!
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் மும்பை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
- 23:21 (IST) 08 Oct 2021டெல்லியை வீழ்த்திய பெங்களூரு; கடைசி பந்தில் திரில் வெற்றி!
டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- 23:05 (IST) 08 Oct 202115 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி!
மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் 236 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 29 பந்துகளில் 80 ரன்கள் தேவை.
- 22:39 (IST) 08 Oct 2021இமாலய இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம்!
மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் 236 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:25 (IST) 08 Oct 2021இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதல்!
வருகிற அக்டோபர் 10ம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 11ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Play-off schedule of ipl2021:
— Johns. (@CricCrazyJohns) October 8, 2021
CSK vs DC - October 10 (Qualifier 1)
RCB vs KKR - October 11 (Eliminator) - 22:17 (IST) 08 Oct 2021பிளே - ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் இருந்து வெளியேறியது மும்பை!
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என கூறப்பட்ட நிலையில், 236 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 70 சேர்த்துள்ளது. இதனால் மும்பை அணி பிளே - ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் இருந்து வெளியேறியது.
- 21:41 (IST) 08 Oct 2021ரன் வேட்டை நடத்திய மும்பை; ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
ஐதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன் வேட்டை நடத்திய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்துள்ளது. எனவே ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Sensational batting display from @mipaltan to post 235/9 on the board!
8⃣4⃣ for @ishankishan51
8⃣2⃣ for @surya_14kumar
4⃣/5⃣2⃣ for @Jaseholder98
The @SunRisers chase will begin shortly. vivoipl srhvmi
Scorecard 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/K8cP0OPzs2 - 21:40 (IST) 08 Oct 2021ஐதராபாத்தை 64 ரன்களில் சுருட்டி, பிளே ஆப் செல்லுமா மும்பை?
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி கொல்கத்தாவை நெட் ரன்ரேட் அடிப்படையில் முந்திச் செல்ல வாய்ப்புள்ளது
- 21:38 (IST) 08 Oct 2021ஐதராபாத்தை 64 ரன்களில் சுருட்டி, பிளே ஆப் செல்லுமா மும்பை?
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி கொல்கத்தாவை நெட் ரன்ரேட் அடிப்படையில் முந்திச் செல்ல வாய்ப்புள்ளது
- 21:06 (IST) 08 Oct 2021சூர்யகுமார் யாதவ் அரைசதம்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்வேட்டை நடத்தி வரும் மும்பை அணியில் அதிரடியாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.
- 21:01 (IST) 08 Oct 202115 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்து வரும் மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்துள்ளது.
- 20:24 (IST) 08 Oct 2021இஷான் கிஷன் அவுட்!
ஐதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 84 ரன்கள் (4 சிக்ஸர், 11 பவுண்டரி) சேர்த்த தொடக்க வீரர் இஷான் கிஷன் உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- 20:22 (IST) 08 Oct 2021ஹர்திக் பாண்டியா அவுட்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸர் அடித்த நிலையில் 10 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
- 20:16 (IST) 08 Oct 2021ஹர்திக் பாண்டியா அவுட்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸர் அடித்த நிலையில் 10 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
- 20:07 (IST) 08 Oct 2021பவர் பிளே முடிவில் மும்பை அணி!
ஐதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
- 20:06 (IST) 08 Oct 2021கேப்டன் ரோகித் சர்மா அவுட்!
ஐதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியில் 18 ரன்கள் சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா ரஷித் கான் சுழலில் சிக்கி வெளியேறினார்.
- 20:02 (IST) 08 Oct 2021இஷான் கிஷன் அரைசதம்!
ஐதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணி வலுவான தொடக்கம் அளித்துள்ளது. அதிரடி காட்டிவரும் அந்த அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளிலேயே தனது அரைசத்தை பதிவு செய்தார்.
- 19:34 (IST) 08 Oct 2021ஐதராபாத் அணியில் கேப்டன் மாற்றம்!
மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெறவில்லை. வில்லியம்சனுக்கு பதிலாக மணீஷ் பாண்டே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
- 19:32 (IST) 08 Oct 2021களமிறங்கும் இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்):
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (விளையாடும் லெவன்):
ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கேப்டன்), ப்ரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்
.@im_manishpandey leading @SunRisers in absence of Kane Williamson.
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Piyush Chawla is making @mipaltan debut. vivoipl srhvmi
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd
A look at the Playing XIs 👇 pic.twitter.com/OyoVFv7wHw - 19:30 (IST) 08 Oct 2021களமிறங்கும் இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்):
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (விளையாடும் லெவன்):
ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (சி), ப்ரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (வ), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்
.@im_manishpandey leading @SunRisers in absence of Kane Williamson.
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Piyush Chawla is making @mipaltan debut. vivoipl srhvmi
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd
A look at the Playing XIs 👇 pic.twitter.com/OyoVFv7wHw - 19:29 (IST) 08 Oct 2021ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு!
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
🚨 Toss Update from Abu Dhabi 🚨@mipaltan have elected to bat against @SunRisers. vivoipl srhvmi
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/olIwIWqLmx - 18:47 (IST) 08 Oct 2021பட்டியலில் 2-வது இடத்திற்கு தாவுமா பெங்களூரு? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
- 18:46 (IST) 08 Oct 2021பட்டியலில் 2-வது இடத்திற்கு தாவுமா பெங்களூரு? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
- 18:32 (IST) 08 Oct 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 55-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.