Advertisment

SRH vs MI Highlights: 278 ரன்கள் இலக்கு வைத்த ஐதராபாத்: மும்பை போராடி தோல்வி

31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
SRH vs MI Live score IPL 2024 match 8 Sunrisers Hyderabad vs Mumbai Indians  scorecard updates Bengaluru Hyderabad Tamil News

ஐ.பி.எல். 2024: சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

SRH vs MI |  IPL 2024 | Sunrisers Hyderabad | Mumbai Indians: ஐதராபாத் அணிக்கு எதிராக 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

Advertisment

17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்  ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று (மார்ச் 27) மோதியது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs MI Live Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில், மயங்க் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் மயங்க் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை விளையாடினார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக ஐதராபாத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் அதிகரித்த நிலையில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். அணியின் ஸ்கோர் 7.5 ஓவர்களில், 113 ரன்களை கடந்தபோது டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 24 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்தார். அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 161 ரன்களை எட்டியபோது அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். 23 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 63 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன்பிறகு இறுதிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த மார்க்ரம் – க்ளாசன் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் அதே சமயம் அதிரடியாக விளையாடி ரன்களையும் சேர்த்தது. இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. 34 பந்துகளை சந்தித்த க்ளாசன் 4 பவுண்டரி 7 சிக்சருடன் 80 ரன்கள் குவித்து அசத்தினார். மார்க்ரம் 28 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 42 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் இஷான் கிஷன், 13 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 34 ரன்களும், ரோகித் சர்மா 12 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய நமன் தார் 14 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியில் கலக்கிய திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து வெளியேறினார். 17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. டிம் டேவிட் 42 ரன்கள் எடுத்தார். இருந்தபோதும் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி சிறப்பான வெற்றி பெற்றது. 

எனினும் இந்த போட்டி பல்வேறு சாதனைகளை படைத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 523 ரன்கள் குவித்துள்ளன. 38 சிக்சர்கள் விளாசப்பட்ட நிலையில், அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆட்டம் என்ற சாதனையையும் ஐதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Indians Sunrisers Hyderabad Mi Vs Srh IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment