Advertisment

SRH vs PBKS Live Score, IPL 2024: 5 பவுண்டரி, 6 சிக்ஸர்.. கதகளி ஆடிய அபிஷேக் சர்மா; பஞ்சர் ஆன பஞ்சாப்: 2ம் இடத்தில் ஹைதராபாத்!

Sunrisers Hyderabad vs Punjab Kings IPL 2024 Score: ராஜீவ் காந்தி மைதானத்தில் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் ஹைதராபாத்; 2 ஆம் இடத்திற்கு முன்னேறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srh vs pbks

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sunrisers Hyderabad vs Punjab Kings IPL 2024 Live Score: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இன் கடைசி லீக் போட்டிகளில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஞாயிற்றுக்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜிதேஷ் சர்மாவின் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொண்டது.

Advertisment

பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 19.1 ஓவரில் 215 ரன்களை எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: SRH vs PBKS Live Score, IPL 2024: PBKS captain Jitesh Sharma opts to bat as SRH eye 2nd spot

ஐ.பி.எல் 2024 போட்டிகளின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்றைய கடைசி நாளின் முதல் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி ஏற்கனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

ஆனால் இரண்டாம் இடத்தை பிடிக்க இன்றைய போட்டியில் வெல்ல முயற்சிக்கும். பஞ்சாப்க்கு இது சம்பிரதாயமான போட்டி என்றாலும், வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க முனைப்புக் காட்டும். இருப்பினும் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்னும், டைடே 46 ரன்னும், ரிலி ரோலோ 49 ரன்னும் எடுத்தனர்.
ஜிதேஷ் சர்மா தன் பங்குக்கு 32 ரன்கள் எடுத்து இருந்தார். சன் ரைசஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

ஹைதராபாத் பேட்டி

இந்த நிலையில், 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின், டிராவிஸ் ஹெட் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
எனினும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 53 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ராகுல் திரிபாதியும் தன் பங்குக்கு 33 ரன்கள் எடுத்தார். நிதிஷ் குமார் ரெட்டி 16 ரன்னில் களத்தில் உள்ளார்.

ஹைதராபாத் அணி 11.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 52 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்த ஆட்டத்தில் கதக்களி ஆடிய அபஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதில், 5 பவுண்டரி 6 சிக்ஸர் அடங்கும். அடுத்து, அணயின் மற்ற வீரர்களான ராகுல் திரிபாதி (33), நிதிஷ் குமார் ரெட்டி (37), ஹெய்ரிச் கிளேசன் (42) ஆகியோர் ரன்களை குவித்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஷாஷாங் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரு அணிகளின் வீரர்களின் விவரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்விர் சிங், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் ஷர்மா (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சிவம் சிங், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Punjab Srh IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment