Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore Live Score in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
Indian Premier League, 2023Rajiv Gandhi International Stadium, Hyderabad 01 June 2023
Sunrisers Hyderabad 186/5 (20.0)
Royal Challengers Bangalore 187/2 (19.2)
Match Ended ( Day – Match 65 ) Royal Challengers Bangalore beat Sunrisers Hyderabad by 8 wickets
அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா – ராகுல் திரிபாதி சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல் திரிபாதி 15 ரன்களிலும், கேப்டன் மார்க்ரம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஹென்றி க்ளாசன் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அவருக்கு பக்கபலமாக ஹேரிபுரூக் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய க்ளாசன் சதமடித்து அசத்திய நிலையில், 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ஹேரி புரூக் 27 ரன்களுடனும், பிலிப்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் புரூஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷபாஸ், ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட்கோலி பாப் டூபிளசிஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், விராட் – பாப் இருவரும் அடுத்துடத்து அரைசதம் அடித்தனர், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த ஐதராபாத் அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.5 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தபோது சதமடித்த விராட்கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பாப் டூளிசியும் ஆட்டமிழந்தார். 47 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
19.2 ஓவர்களில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதரபாத் அணி தரப்பில், புவனேஷ்வர், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil