IPL 2024 | Sunrisers Hyderabad | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். 2024 தொடரில் 41-வது லீக் ஆட்டம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே ஐதராபாத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்.சி.பி) கேப்டன் ஃபாஃப் டுபிளெஸிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆர்.சி.பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுபிளெஸிஸ் களமிறங்கினர்.
விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுபிளெஸிஸ் இருவரும் அதிரடியாக தொடங்கினார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.5 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்திருந்தபோது, 12 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்த நிலையில், நடராஜன் பந்தில் எய்டன் மர்க்ரம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வில் ஜேக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
வில் ஜேக்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்து மயங்க் மார்கண்டே பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, பேட்டிங் செய்ய வந்த ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.
வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது, ரஜத் பட்டிதார் 50 ரன்கள் அடித்திருந்த நிலையில், உனாட்கட் பந்தில் அப்துல் சமத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கேமரான் கிரீன் பேட்டிங் செய்ய வந்தார்.
கேமரான் கிரீன் அதிரடியாக அடித்து ஆட மறுமுனையில் இருந்த விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்த நிலையில், உனாட்கட் பந்தில் அப்துல் சமத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மஹிபால் லோம்ரோர் பேட்டிங் செய்ய வந்தார்.
மஹிபால் லோம்ரோர் 7 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களிலும் 20-வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்வப்னில் சிங் 12 ரன்களில்ம் ஆட்டமிழந்தனர். கேமரான் கிரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ட்ரவிஸ் ஹெட் களமிறங்கினர். ட்ரவிஸ் ஹெட் 2 ரன்னில் வில் ஜேக்ஸ் பந்தில் கர்ன் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஏய்டன் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில், யஷ் தயால் பந்தில் தினேஷ் கார்த்திக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில், யஷ் தயால் பந்தில் தினேஷ் கார்த்திக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது, 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஏய்டன் மர்க்ரம் ஸ்வப்னில் சிங் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, ஹென்ரிச் கிளாஸென் பேட்டிங் செய்ய வந்தார்.
அதே ஓவரில் கடைசி பந்தில், ஹென்ரிஸ் கிளாஸென் 3 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து, ஸ்வப்னில் சிங் பந்தில் கேமிரான் கிரீன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷாபாஸ் அஹமது பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 ரன்கள் அடித்திருந்த நிதிஷ் குமார் ரெட்டி, கர்ன் சர்மா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, அப்துல் சமத் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தபோது, 6 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்த அப்துல் சமத் கர்ன் சமா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஷாபாஸ் அஹமது மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தபோது, 15 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த பேட் கம்மின்ஸ், கேமெரான் கிரீன் பந்தில் முஹமது சிராஜ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, புவனேஷ் குமார் பேட்டிங் செய்ய வந்தார். அவரும் கேமெரான் கிரீன் பந்தில் முஹமது சிராஜ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து உனாட்கட் பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஷாபாஸ் அஹமது 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல, உனாட்கட் 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார்.
பெங்களூரு அணியில், ஸ்வப்னில் சிங், கர்ன் சர்மா, கேமெரான் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs RCB Live Score, IPL 2024
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து எழுச்சி கண்டுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள்) என்ற சாதனையை படைத்த ஐதராபாத் தொடர்ந்து ரன்வேட்டையில் மிரட்டுகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் சேர்த்து பிரமிக்க வைத்துள்ள ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 324 ரன்), ஹென்ரிச் கிளாசென் (268), அபிஷேக் ஷர்மா (257) ஆகியோர் தரமான ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே வலுசேர்க்கிறார்கள்.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு நடப்பு சீசனில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி இதுவரை ஆடியுள்ள 8 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துவிட்டது. மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.
இந்த சீசனில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் ஐதராபாத்தை பெங்களூரு சமாளிக்குமா? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. போட்டியில் உயிர்ப்புடன் இருக்க பெங்களூரு முடிந்தவரை போராடும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு, ரன் குவிப்பில் புதிய வரலாறு படைக்கும் எண்ணத்துடன் ஐதராபாத் களமாடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் 13 ஆட்டத்திலும், பெங்களூரு 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.