/tamil-ie/media/media_files/uploads/2019/03/sun-risers-1.jpg)
SRH vs RR 2019 Live Streaming, RR vs Live Telecast, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ்
Rajasthan Royals vs Sunrisers Hyderabad Live Streaming: ஐபிஎல் போட்டியின் 8-வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் 8-வது ஆட்டம் இன்று (மார்ச் 29) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கனே வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
உடல் தகுதி பிரச்னை காரணமாக கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆடாத கனே வில்லியம்சன் இன்று களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அந்த அணிக்கு பலம்! தடைக்கு பிறகு களம் இறங்கிய டேவிட் வார்னர் முதல் ஆட்டத்திலேயே ஃபார்முக்கு வந்ததும், ஹைதராபாத்தின் பலம்தான். ஆனால் முதல் ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸெல்லின் அதிரடி காரணமாக வெற்றியை கோட்டை விட்டது சன் ரைசர்ஸ்.
ராஜஸ்தான் ராயல்ஸை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. அதில் ஜோஸ் பட்லரை பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் ஆக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதிலிருந்து மீண்டு இன்று சாதிக்க முயற்சிக்கும் பஞ்சாப்.
இரு அணிகள் இடையிலான இந்த ஆட்டத்தின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் காணலாம். ஹாட் ஸ்டார், ஜியோ டிவி ஆகியவற்றிலும் இன்று இரவு 8 மணி முதல் பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.