Advertisment

பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் விலகல்...

Sri Lanka - Pakistan: 2009- தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக பாகிஸ்தான், சர்வதேச கிரிக்கெட்டை நடத்தவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Srilanka Cricketer Lasith Malinga opt out of pakistan tour

Lasith Malinga

Srilankan Cricket Team: இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன், திமுத் கருணாரத்னே மற்றும் முன்னாள் வீரர்களான லசித் மலிங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட பத்து இலங்கை வீரர்கள் பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக, வரவிருக்கும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

Advertisment

செப்டம்பர்-27 முதல் அக்டோபர்-9 வரை நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3, 20-20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி. இந்த சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்களுடன் சந்திப்பை நடத்தியது.

டிசம்பர் மாதம் நடக்கும், ’உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்’ ஒரு பகுதியாக, தங்கள் முதல் சோதனையை சொந்த மண்ணில் நடத்த உள்ளது பாகிஸ்தான். இதற்கிடையே 2009-ல் லாகூரில், இலங்கை பேருந்து மீது நடந்த தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டு, ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.

இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்து எஸ்.எல்.சி-யின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் விளக்கினார். அதோடு போட்டியில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

”இந்த சந்திப்பு எதிர்வரும் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுக்கு தெரியப்படுத்துவதை, நோக்கமாகக் கொண்டது. அதோடு வீரர்களின் 'முடிவை' (பங்கேற்பது அல்லது பங்கேற்காதது) தெரிந்துக் கொள்வதற்காகவும் நடந்தது” என எஸ்.எல்.சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லா, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சயா, சுரங்கா லக்மல் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் இதில் விளையாடப்போவதில்லை என முடிவெடுத்தனர். குசல் மெண்டிஸ் காயம் காரணமாக இதிலிருந்து விலகியுள்ளார்.

2009- தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக பாகிஸ்தான், சர்வதேச கிரிக்கெட்டை நடத்தவில்லை. தங்களது சொந்த போட்டிகளையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடியது. இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் தங்கள் மண்ணில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Pakistan Lasith Malinga Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment