“ஒரு குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளது,” என விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவஞ்சந்திரா ஏ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார்.
“இது விளையாட்டு குற்றங்கள் தொடர்பாக (போலீஸ்) சிறப்பு புலனாய்வு பிரிவினால் விசாரணை கையாளப்படுகிறது.”
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாரஸ் வாக்கெடுப்பில் 2000-2020 காலக்கட்டத்தில் மிகப் பெரிய விளையாட்டு தருணமாக வாக்களிக்கப்பட்ட இந்தியாவின் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றி, இலங்கையில் பலருக்கு உறுத்தலாக இருந்துள்ளது, இப்போது உள்ளூர் ஊடக அறிக்கைகள் வாயிலாக, 2011 இறுதிப் போட்டிக்கான தலைமை தேர்வாளர் அரவிந்தா டி சில்வா, செவ்வாயன்று விசாரணைக்கு வரவழைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
‘அப்போ அன்வர்?’ – டிக்டாக் தடைக்கு வார்னரை கலாய்த்த அஷ்வின்
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்வதற்காக, இலங்கை போட்டியை விற்றதாகக் கூறி முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
“நான் இப்போது அதைப் பற்றி பேச முடியும் என்று நினைக்கிறேன். நான் வீரர்களைஇதில் தொடர்புப்படுத்தவில்லை, ஆனால் சில பிரிவுகள் இதில் ஈடுபட்டன, ”என்று அலுத்கமகே கூறினார்.
1996 உலகக் கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரனதுங்காவும் சந்தேகங்களை எழுப்பி, இது குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், இந்தியாவின் கவுதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் ரனதுங்காவின் கூற்றுக்களை முற்றிலும் மறுத்தனர்.
ஐசிசி எலைட் பேனலின் யங் அம்பயர் – இந்தியாவின் நிதின் மேனனுக்கு குவியும் வாழ்த்து
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த மஹேலா ஜெயவர்தனே, ‘தேர்தல்கள் வருவதை முன்னிட்டு, இந்த பிரச்சினை மீண்டும் ஒரு முறை கொண்டு வரப்படுகிறது’ என்றும் கூறினார். இறுதிப் போட்டியில் ஜெயவர்த்தனே சதம் (103) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் இலங்கை கேப்டனாக இருந்த குமார் சங்கக்காரர் நியூஸ் 1 பத்திரிகையிடம், “இதன் அடிப்பகுதி வரை சென்று யாரும் ஊகிக்கத் தேவையில்லை, அது மிகவும் விவேகமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”