Sri Lanka vs Afghanistan: நேற்று (17. 9. 18) நடைப்பெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது.
Sri Lanka vs Afghanistan: இலங்கை அணியின் மோசமான தோல்வி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஏற்கனே நடைப்பெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி கண்டதால் நேற்றைய ஆட்டத்தில் கட்டாயம் ஜெயித்தாக வேண்டும் என்ற நோக்கி இலங்கை அணி களத்தில் இறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ரன்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 72 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ரன்களும் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதனடிப்படையில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் டக்-அவுட்டாகி அதிர்ச்சி தோல்வி கொடுத்தார்.
அவருக்கு பின்பு இலங்கை அணி அடுத்தடுத்த விக்கெட்டை பறிக் கொடுத்துக் கொண்டே வந்தது.41.2 ஓவர்களில் இலங்கை அணி, 158 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான ரஹ்மத் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடன் தோல்வியைத் தழுவிய முன்னாள் சாம்பியனான இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இதன் மூலம் 'பி' பிரிவில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறின. ஆசியக் கோப்பையை 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை வென்ற இலங்கை அணி இப்படி ஒரு தோல்வியை சந்தித்திருப்பது பெரும் கிரிக்கெர் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.