இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நேற்று (ஜன.1) தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை இலங்கை ஆடத் தொடங்கியது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸின் பந்து, இலங்கை ஓப்பனர் கருணரத்னே ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
இதனால் நிலைகுலைந்து போன கருணரத்னே, கிரீசிலேயே சரிந்து விழுந்தார். நீண்ட நேரமாகியும், அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதைத் தொடர்ந்து, ஸ்ட்ரெட்சர் கொண்டு வரப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கருணரத்னே கொண்டுச் செல்லப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
— Mr Gentleman (@183_264) 2 February 2019
கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முதல்தர போட்டியில், வளர்ந்து வந்த பேட்ஸ்மேனான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.