இதோ வந்துட்டேன்! 7 ரன்களுக்கு 6 விக்கெட் - அச்சுறுத்தும் 17 வயது ஜூனியர் மலிங்கா

அரவிந்த டி சில்வாவுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த பொக்கிஷம் என சர் விவியன் ரிச்சர்ட்ஸின் பாராட்டைப் பெற்றவர் லசித் மலிங்கா

அரவிந்த டி சில்வாவுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த பொக்கிஷம் என சர் விவியன் ரிச்சர்ட்ஸின் பாராட்டைப் பெற்றவர் லசித் மலிங்கா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka's 17-year-old who bowls like Malinga - இதோ வந்துட்டேன்! 7 ரன்களுக்கு 6 விக்கெட் - அச்சுறுத்தும் 17 வயது ஜூனியர் மலிங்கா

Sri Lanka's 17-year-old who bowls like Malinga - இதோ வந்துட்டேன்! 7 ரன்களுக்கு 6 விக்கெட் - அச்சுறுத்தும் 17 வயது ஜூனியர் மலிங்கா

லசித் மலிங்காவின் roundarm slinga பவுலிங் ஸ்டைலில் பந்து வீசுபவர்களை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், ஸ்லிங்கா என்றழைக்கப்படும் அவரது பவுலிங் ஸ்டைலில் க்ளோனிங் செய்யப்பட்ட பவுலரை கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.

அந்த ரீல் க்ளோனிங் பவுலர் மதீஷா பதிரானா... வயது 17.

Advertisment

அப்படியே மலிங்கா பவுலிங் போலவே தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் மதீஷா, ட்ரினிட்டி அணிக்காக ஆடிய தனது முதல் போட்டியிலேயே 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவரது டெத் யார்க்கர் வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.

லசித் மலிங்கா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வுப் பெற்றுவிட்ட நிலையில், டி20களில் மட்டும் ஆடி வருகிறார். அதிலிருந்தும் விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், மதீஷாவை தேடிக் கண்டுபிடித்திருக்கிறது இலங்கை.

Advertisment
Advertisements

அரவிந்த டி சில்வாவுக்கு பிறகு இலங்கைக்கு கிடைத்த பொக்கிஷம் என சர் விவியன் ரிச்சர்ட்ஸின் பாராட்டைப் பெற்றவர் லசித் மலிங்கா. அப்படிப்பட்ட கிரேட் மலிங்கா போன்று பந்து வீசுவது மட்டுமின்றி, அவரைப் போல பெரும் புகழை மதீஷா பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Lasith Malinga

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: