/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-08T173331.814.jpg)
Gunathilaka, 31, was arrested from his team hotel by Sydney police, even as other members of the Sri Lankan squad returned home following the side's exit in the Super 12 stage.
Danushka Gunathilaka Tamil News: கடந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார், குணதிலகாவை கைது செய்தனர்.
இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரை இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இடைநீக்கம் செய்யப்பட்டது. அதுமுதல் அவர் ஆஸ்திரேலியாவில் தான் இருந்தார்.
32 வயதான தனுஷ்கா குணதிலகா மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதில் மூன்று கடந்த மாதம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் 'தான் குற்றமற்றவர்' என நிரூபிக்க இன்று (வியாழக்கிழமை) சிட்னியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அவரது ஜாமீன் நிபந்தனைகளை மாற்றியமைக்க தற்போது முயற்சித்து வருகிறார். அதனால் அவர் தினமும் காவல்நிலையம் செல்லாமல், வாரத்தில் மூன்று முறை மட்டுமே செல்ல வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.