/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-09T173800.389.jpg)
State Kabaddi Tournament: Pro Kabaddi player Thivakaran will be coach for Trichy team Tamil News
க.சண்முகவடிவேல்
Tamilnadu State Kabaddi Tournament Tamil News: தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-ஆவது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-09T173808.732.jpg)
மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் தங்க.நீலகண்டன் மற்றும் பெருந்தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்வில் 20 வயத்துக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இந்ததேர்வு நிகழ்ச்சியில், தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் இந்திய ப்ரோ கபடி அணி வீரர் திவாகர், பாரதிதாசன் பல்கலைக்கழக வீரர் கணேசன், தீயணைப்பு துறை வீரர் சூர்யமூர்த்தி மற்றும் சிறப்பு விருந்தினராக மணல்மேடு தங்கதுரை, ரவி, சீனிவாசநல்லூர் தர்மு, மூத்த நடுவர்கள் வேங்கூர் ரத்தினம், காட்டூர் மதியழகன் உள்பட நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-09T174136.338.jpg)
இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் திருச்சி மாவட்ட அணிக்கு இந்திய ப்ரோ கபடி வீரர் திவாகர் பயிற்சி அளிக்க உள்ளார். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தை 9524676767 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.