சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மாநில அளவிலான திறந்தவெளி சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 4 வயது முதல் வயது வாரியாக நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
/indian-express-tamil/media/post_attachments/ecc83881-823.jpg)
ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், மான் கொம்பு ஆட்டம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/42eb1fbd-e6f.jpg)
வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், இந்திய பாரம்பரிய சிலம்பக் கலை தேசிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
இந்த மாநில அளவிலான போட்டி பாரம்பரிய போர்க்கலையின் முக்கியத்துவத்தையும், இளைஞர்கள் மத்தியில் அதன் வளர்ச்சியையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.