'ஏமாற்றமளிக்கும் சீசன்’... தொடர் தோல்வியால் சி.எஸ்.கே பயிற்சியாளர் வேதனை

4 தொடர் தோல்விகள் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், போட்டியின் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

4 தொடர் தோல்விகள் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், போட்டியின் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Stephen Fleming CSK 4th straight loss frustrating season Tamil News

4 தொடர் தோல்விகள் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், போட்டியின் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30  மணிக்கு சண்டிகர் மாநிலம் முல்லன்பூரில் நடக்கும் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Stephen Fleming after CSK’s 4th straight loss: ‘Been a frustrating season so far’

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் தோல்வியுற்றது சென்னை. இது அந்த அணிக்கு 4-வது தோல்வியாகும். இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை மட்டும் வென்றது. அதன்பிறகு நடந்த  4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. 

இந்த தொடர் தோல்விகள் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், போட்டியின் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின் முல்லன்பூரில் பத்திரிகையாளர்களிடம்  ஸ்டீபன் ஃப்ளெமிங் பேசுகையில், "இந்தப் போட்டியில் கேட்சிங் மிகவும் மோசமாக இருந்தது. இரு அணிகளுமே கேட்ச் பிடிப்பதில் கோட்டை விட்டனர். ஃப்ளட்லைட் வெளிச்சம் காரணமாக அப்படி கேட்ச்சை தவற விட்டனரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அது எங்களுக்கு கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. கூடுதலாக  20 ரன்கள் எடுக்கப்படுவதை தடுக்க நீங்கள் விரும்பினால், கேட்ச்களை கச்சிதமாக பிடிக்க வேண்டும். 

இந்தப் போட்டியில் இருந்து நேர்மறையான விஷயம் என்றால், நாங்கள் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்களது டாப் ஆர்டர் வீரர்கள்  கொஞ்சம் நன்றாக பேட்டிங்  ஆடினார்கள். நாங்கள் சேஸிங் செய்யும் போது அது பெரிய குறையாக இருந்தது. ஆனால், மிடில் ஓவர்களில் ரன் விகிதத்திற்கு ஏற்ப எங்களால் தக்க வைக்க முடியவில்லை. அதனால், கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் அமைந்தது. ஆனாலும், கடைசி வரை எங்களால் போட்டியை எடுத்த செல்ல முடிந்தது. எனவே நீண்ட நேரம் ஒரு ஆட்டத்தில் இருப்பது நேர்மறையான அம்சமாகும். மைதானத்தில் ஆட்டம் உண்மையில் தோற்றுவிட்டது." என்று அவர் வேதனை தெரிவித்தார். 

Stephen Fleming Chennai Super Kings Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: