சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃபிளெமிங் பெயர் சி.எஸ்.கே-வின் எக்ஸ் பக்கத்தின் பதிவு மூலம் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. இதற்கு சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் ஃபிளெமிங் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் 2009-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். சி.எஸ்.கே அணி இதுவரை 5 முறை ஐ.பி.எல் பட்டத்தை வென்றுள்ளது.
பி.சி.சி.ஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேடிக்கொன்டிருக்கும் நிலையில், ஸ்டீபன் ஃபிளெமிங்கின் பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஸ்டீபன் ஃபிளெமிங்கிடம் பயிற்சியாளராக பணிபுரிய ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பி.சி.சி.ஐ பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், ஸ்டீபன் ஃபிளெமிங் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில், சி.எஸ்.கே அணியின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான பதிவு, ஸ்டீபன் ஃபிளெமிங் பெயரை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது எக்ஸ் பக்கத்தில், “எல்லா நகர்வும் அவருடைய வழிகாட்டுதலின்படி இருந்தது. ஒவ்வொரு கர்ஜனையும் அவருடைய உள்ளீடுகளின்படி இருந்தது. ஒவ்வொரு அடியும் அவருடைய ஆதரவுடன் இருந்தது. எங்களுடைய தலைவர்.” என்று பதிவிட்டிருந்தது.
ஸ்டீபன் ஃபிளெமிங் சி.எஸ்.கே அணிக்காக 2008-ம் ஆண்டு விளையாடினார். 2009-ம் ஆண்டு சி.எஸ்.கே அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே அணியுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்படுகிறார். 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங்கின் வழிகாட்டுதலில் சி.எஸ்.கே 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்கும் எம்.எஸ். தோனிக்கும் ஒரு உறுதியான நட்பு இருக்கிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃபிளெமிங் பெயர் சி.எஸ்.கே-வின் எக்ஸ் பக்கத்தின் பதிவு மூலம் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிர்சியாளராக பணிபுரிவதற்கு சம்மதம் கேட்டு ஸ்டீபன் ஃபிளெமிங்கை பி.சி.சி.ஐ அணுகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, ஸ்டீபன் ஃபிளெமிங் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டால், ஸ்டீபன் ஃபிளெமிங் சி.எஸ்.கே பயிற்சியாளர் பணியில் இருந்து விலகி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“