பந்து சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ராஜினாமா

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகியுள்ளார். இவருடன் துணை கேப்டர் டேவிட் வார்னரும் பதவி ராஜினாமா செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்தது. அந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்திய புகாரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தனது அணி வீரர் கேமரூன் பேன்கிராப்ட் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து, இனி இதுபோன்ற செயல்கள் அவரின் தலைமை கீழ் நடக்காது என்று எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கவுரவத்தை குலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், கிரிகெட் அணியின் பதவியிலிருந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம் மிகுந்த வேதனையில் உள்ளதாகக் கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும். அதுவரை கேப்டன் ஸ்மித் பதவியில் நீடிப்பார் என்றும் கூறினார்.
இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்மித், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் துணை கேப்டன் டேவிட் வார்னரும் பதவி ராஜினாம செய்துள்ளார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close