Advertisment

காதலர் தினத்தில் 'பல்ப்' வாங்கிய ஆஸி,. வீரர்… மனைவிக்கு பதில் வேறு ஒருவரை டேக் செய்து சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவி டானி வில்லிஸ்-க்கு பதில் தவறுதலாக மற்றொரு டானி வில்லிஸை டேக் செய்து 'பல்ப்' வாங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Steve Smith’s wrong Valentine’s Day wishing for wife Dani Willis Tamil News

(LEFT) Steve Smith and his wife Dani Willis; (RIGHT) Smith negotiates a delivery in the first Test against India. (PHOTOS: Instagram/Steve Smith, AP)

Australian cricketer Steve Smith latest Tamil News: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், பலரும் தங்களது அன்பிற்குரியவர்களுக்கு காதலர் தின பரிமாறிக்கொண்டு வருகின்றனர். நேரில் சந்திக்க இயலாதவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவி டானி வில்லிஸ்-க்கு காதலர் தின வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “என் அழகான மனைவி டானி வில்லிஸ்-க்கு காதலர் தின வாழ்த்துக்கள். இன்னும் சில நாட்களில் உங்களைப் பார்க்க காத்திருப்பதில் ஆவரமாக உள்ளேன் ”என்று ட்வீட் செய்துள்ளார்.

publive-image

எனினும், ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவி டானி வில்லிஸ்-க்கு பதில் தவறுதலாக மற்றொரு டானி வில்லிஸை டேக் செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, வில்லிஸ், ட்விட்டரை தளத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒருவர் கிடையாது. அவரது கடைசியாக ஜனவரி 2018ல் ரீட்வீட் செய்தார். மேலும், அவரது கடைசி ட்வீட்டை நவம்பர் 2017 -ல் பதிவிட்டு இருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்டீவ் ஸ்மித் செய்த இந்த சம்பவத்தை இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். மேலும், அவரது ட்விட்டர் பதிவிற்கு காமெடியான கமெண்டுகளையும் தட்டிச் சென்றனர். இதனால், கடுப்பான ஸ்மித் அந்த பதிவை தற்போது நீக்கியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 37 ரன்னில் அவுட் ஆகிய ஸ்மித், 2வது இன்னிங்சில் நிலைத்து நின்று விளையாடினார். ஆனால், அவருடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் ஒருமுனையில் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 25 ரன்கள் எடுத்த ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழ்க்காமல் களத்தில் இருந்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Valentines Day India Vs Australia Sports Cricket Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment