sunil gavaskar about dhoni retirement - 'வெளியே தள்ளுவதற்கு முன் தோனி போய்விட்டால் நல்லது' - சுனில் கவாஸ்கர்
முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், தோனிக்கான நேரம் வந்துவிட்டது என்றும், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை டி20க்கு 'தோனியைத் தாண்டி பார்க்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
Advertisment
இதுகுறித்து ஆஜ் தக் எனும் செய்தி நிறுவனத்துக்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில், "உலகக் கோப்பை டி20 தொடர் குறித்து பேசினீர்கள் என்றால், நான் ரிஷப் பண்ட்டை தான் அணியில் தேர்வு செய்வேன். நாம் முன்னோக்கி பார்க்க வேண்டும். எனது உலகக் கோப்பை டி20 அணியில் தோனிக்கு இடம் கிடையாது.
ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக வேறொரு மாற்று வேண்டுமெனில், நான் சஞ்சு சாம்சன் குறித்து யோசிப்பேன். ஏனெனில், சஞ்சு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனும் கூட. டி20 உலகக் கோப்பை குறித்து யோசிக்கும் போது, நாம் இளைஞர்களை முன்வைத்தே நகர வேண்டும். தோனி இந்தியாவுக்காக மாபெரும் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், இப்போது அவரை கடந்து நாம் யோசிக்க வேண்டிய நேரமிது" என்றார்.
Advertisment
Advertisements
அதேபோல், இந்தியா டுடே சேனலுக்கு பேசிய கவாஸ்கர், "வெளியே தள்ளுவதற்கு முன்பு, அவராகவே போய்விட வேண்டும்" என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.