ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து இரண்டாவது கோல்டன் டக் ஆகியுள்ளதால், ஒருநாள் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் சூர்யகுமார் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வதாக பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி20 பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் அசத்தினார். மும்பை இந்தியன்ஸிற்காக ஐ.பி.எல் மற்றும் இந்திய டி20 அணியில் புகழ் பெற்றதிலிருந்து, சூர்யகுமார் கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.சி.சி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்து, டி20 போட்டிகளில் நிறுத்த முடியாதவராக இருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோல்டன் டக் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்கள்: வீடியோ: பாண்ட்யா அவுட்; சக்திமான் எஃபெக்ட்-ல் கேட்ச் செய்த ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியத் தொடர் சூர்யகுமாருக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்தது, மிகவும் விரும்பப்பட்ட நம்பர்.4 பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இடது கை வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் சூர்யகுமார் கோல்டன் டக் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார்.
கவாஸ்கர் கூறுகையில், ”சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்கும் அதே பந்தில் ஒருநாள் போட்டிகளில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். இந்த சிரமத்திலிருந்து வெளியே வர அவர் தனது பேட்டிங் பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறார். மேலும் அவரது நிலைப்பாடும் வெளிப்படையானது. டி20 கிரிக்கெட்டுக்கு இது நல்லது, ஏனென்றால் ஓவர் பிட்ச் செய்யப்பட்ட எந்த பந்து வீச்சையும் அவர் சிக்ஸருக்கு விளாச முடியும். ஆனால் இங்கே, பந்தை காலுக்கு அருகில் வைக்கும்போது, இந்த நிலைப்பாட்டுடன், மட்டை கண்டிப்பாக குறுக்கே வரும். நேராக வர முடியாது. எனவே, பந்து உள்ளே திரும்பினால், அவர் சிரமப்படுவார். இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது குறித்து அவர் பேட்டிங் பயிற்சியாளருடன் நேரத்தை செலவிட வேண்டும்,” என்று கூறினார்.
சூர்யகுமார் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார். 20 இன்னிங்ஸ்களில் அவர் 25.47 சராசரியில் 433 ரன்களை எடுத்துள்ளார், இதில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil