Sunil Gavaskar claims Ashwin, Natarajan subject to ‘different rules’ within Indian team : இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் ஒவ்வொரு விதிகள் என்று கவாஸ்கர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ள கவாஸ்கர், ஒரு போட்டியில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அவர் அடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்படுவார். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் பேட்ஸ்மென்களுக்கு இருப்பதில்லை என்றார்.
டி. நடராஜன் பற்றி குறிப்பிட்ட போது, அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சில நாட்களிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானார். ஆனால் அவர் அமீரகத்தில் ஐ.பி.எல். விளையாட்டினை முடித்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். அவர் இன்னும் தன்னுடைய மகளை பார்க்கவில்லை. ஆனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தை பிறக்கும் தருணத்தில் தன் மனைவியின் அருகே இருக்க இந்தியா சென்றுவிட்டார்.
நடராஜனும் தன்னுடைய முதல் குழந்தையை இன்னும் பார்க்கவில்லை. அணியில் உறுப்பினராக கூட இல்லை, ஆனால் ஆஸ்திரேலியா போட்டிக்காக நெட் பவுலராக இருக்க வைக்கப்பட்டுள்ளார். அனைத்து போட்டிகளும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் முடிவடைந்த பிறகே நடராஜன் தன்னுடைய மகளை பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"