Advertisment

பிருத்வி ஷாவின் இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவர் கே.எல்.ராகுல்: சுனில் கவாஸ்கர்

பிருத்வி ஷாவின் இடத்தில் விளையாடுவதற்கு கே.எல்.ராகுல் தகுதியானவர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SUNIL GAVASKAR ON prithivi shaw - பிருத்வி ஷாவின் இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவர் கே.எல்.ராகுல்: சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இந்த இரு அணிகளிடையேயான 2வது  டெஸ்ட் போட்டி  வரும் 26 -ம் தேதி எம் சி ஜி மைதானத்தில் நடைபெறுகின்றது.

Advertisment

இந்த போட்டியில் என்னென்ன  மாற்றங்களை  கொண்டு வர வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது :

பிரிதிவி ஷா பார்ம் -அவுட்ல் இருப்பதால் அவருக்கு பதிலாக கே.ல். ராகுல் விளையாட வேண்டும். கே.எல். ராகுல் ஒரு சிறப்பான தொடக்கத்தை தர அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே அவரை கண்டிப்பாக  அணியில் சேர்க்க வேண்டும். அதேபோல் சுப்மன் கில் நல்ல பாமில் உள்ளதால் 5வது அல்லது 6 வது நபராக விளையாடினால் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு நல்ல துவக்கத்தை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே  மீதமுள்ள போட்டிகளில் வீரர்கள்  வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்.  இல்லையென்றால் 4-0 என்ற  தொடர் தோல்விகளை சந்திக்கவே  வாய்ப்பு உள்ளது. முதல் போட்டியில் மோசமான முறையில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு கண்டிப்பாக கோபத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை நிச்சயம் காட்சிகள் மாறும்.

நாம் கேட்சுகளை  நழுவ விடாமல் பிடித்திருந்தால் 53 ரன்கள் முன்னிலை பெற்று இருந்திருப்போம். டிம் பெயின் மற்றும் மார்னஸ் லாபூசாக்னே ஆகியோரின் விக்கெட்டுகளை  முன்னதாகவே எடுத்திருந்தால் 120 ரன்கள் முன்னிலை பெற வாய்ப்பு இருந்திருக்கும். கேட்சுகளை தவற விட்டதால்  ஆஸ்திரேலிய அணியினர்  50 ரன்கள் முன்னிலை அடைந்தனர்.  என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Cricket Sunil Gavaskar Prithvi Shaw
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment