Advertisment

'இந்திய கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர்'… சுனில் கவாஸ்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கொரோனா தொற்றுபரவலின் போது சுனில் கவாஸ்கர் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 24 லட்ச ரூபாயும், பி எம்-கேர்ஸ் நிதிக்கு 35 லட்சமும் வழங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sunil gavaskar net worth in tamil

இந்தியாவின் மிக அழகான கடற்கரை வீடுகளில் ஒன்றான இஸ்ப்ரவா வில்லாவையும் சுனில் கவாஸ்கர் வாங்கியுள்ளார்.

Happy Birthday Sunil Gavaskar Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான சுனில் மனோகர் கவாஸ்கர் இன்று தனது 74வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார் (ஜூலை 10, 2023).

Advertisment

உறுதிப்பாடு, உற்சாகம் மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட ஒரு புதிய சகாப்தத்தை டெஸ்ட் பேட்ஸ்மேன்ஷிப்பில் அறிமுகப்படுத்தினார் சுனில் கவாஸ்கர். 1971 முதல் 1987 வரை அவர் இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தார். அவர் 125 டெஸ்ட் போட்டிகளில் 10122 ரன்களையும், 108 ஒருநாள் போட்டிகளில், 3092 ரன்களையும் குவித்துள்ளார்.

publive-image

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சூராதி சூரனாக இருந்த சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 65.45 சராசரியுடன், டெஸ்ட் வரலாற்றில் மிகவும் இரக்கமற்ற வகையில், அந்த அணியின் நான்கு முனை வேகப்பந்து வீச்சு தாக்குதலை நொறுக்கி அள்ளியவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய அணிக்கு பலமுறை கேப்டனாக இருந்த அவர் 1984 ஆசிய கோப்பை மற்றும் 1985ல் பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வென்றதன் மூலம், அவரது தலைமையிலான இந்திய அணி ஆக்ரோஷமான ஒன்றாகக் கருதப்பட்டது.

சுனில் கவாஸ்கர் 1987ல் ஓய்வு பெற்றாலும், 'லிட்டில் மாஸ்டர்' ஆன அவர் வணிக ஆடுகளத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். அவ்வகையில் அவரின் சொத்து மதிப்பு, விளம்பர தூதராக ஒப்பந்தங்கள், முதலீடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒப்பந்தங்கள்

‘சான்ஸ்பேரில்ஸ் கிரீன்லாண்ட்ஸ் (எஸ்.ஜி) கிரிக்கெட்’ நிறுவனத்தின் முதல் விளம்பர தூதர் சுனில் கவாஸ்கர் ஆவர். மேலும் அந்த பிராண்டுடன் நீண்ட காலமாக இணைந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்த நிறுவனம் அவரது பெயரில் தனித்துவமான பேட்களை வெளியிட்டு வருகிறது.

publive-image

அடுத்ததாக கவாஸ்கர் டான்யூப், இந்தியன் ஆயில், டாய்ச் வங்கி, எல்.ஜி மற்றும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

சொத்து மதிப்பு

சுனில் கவாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) வர்ணனையாளராக அவர் செய்துள்ள ஒப்பந்தம் மற்றும் அவரது ஒப்புதல் ஒப்பந்தங்கள் அவரது நிதி நிலையில் ஒரு முக்கிய வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.

பல்வேறு முயற்சிகளுக்காக பி.சி.சி.ஐ கவாஸ்கருக்கு 6 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்தியப் போட்டிகளுக்கான வர்ணனையாளராக, கவாஸ்கர் ஆண்டுக்கு சுமார் 36 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போது அவரது நிபுணர் பகுப்பாய்வு மற்றும் வர்ணனைக்காக, அவருக்கு ஆண்டுக்கு 19 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது.

publive-image

அவருக்கு மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்தியாவின் மிக அழகான கடற்கரை வீடுகளில் ஒன்றான இஸ்ப்ரவா வில்லாவையும் கவாஸ்கர் வாங்கியுள்ளார். அவர் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் உள்ளிட்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் சிலவற்றையும் வைத்திருக்கிறார்.

முதலீடு

publive-image

சுனில் கவாஸ்கர் மும்பையை தளமாகக் கொண்ட ஒரு புதிய போர்டு கேம் நிறுவனமான பின்கா கேம்ஸில் முதலீடு செய்துள்ளார்.

தொண்டு

சுனில் கவாஸ்கர் ஹார்ட்-டு-ஹார்ட் அறக்கட்டளையின் ஆளுநர்கள் குழுவின் தலைவராக பணியாற்றுகிறார். கவாஸ்கர் தி சாம்ப்ஸ் அறக்கட்டளைக்கும் பங்களிக்கிறார். கொரோனா தொற்றுபரவலின் போது அவர் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 24 லட்ச ரூபாயும், பி எம்-கேர்ஸ் நிதிக்கு 35 லட்சமும் வழங்கினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket Bcci Sunil Gavaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment