Gautam Gambhir | Virat Kohli | Sunil Gavaskar | Ravi Shastri | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு 7.30 மணியளவில் அளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 183 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடி காட்ட 16.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும், 3 விக்கெட்டை மட்டும் இழந்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
கட்டியணைத்துக் கொண்ட கோலி - கம்பீர்
/indian-express-tamil/media/post_attachments/cb4a0021-270.jpg)
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங் செய்தபோது 16-வது ஓவர் முடிவில் இடைவேளை விடப்பட்டது. அப்போது களத்திற்குள் வந்த கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அங்கிருந்த விராட் கோலி அருகே சென்று தாமாக பேசினார். அவரது தோள் மீது விராட் கோலியும் கை போட்டு பேசினார். அரை சதமடித்ததற்காக விராட் கோலிக்கு சிரித்த முகத்துடன் கம்பீர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தை பார்த்த மொத்த ரசிகர்களும் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கவுன்டர் போட்ட கவாஸ்கர் - அதிர்ந்து போன ரவி சாஸ்திரி
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கோலி - கம்பீர் மைதானத்திற்குள் கட்டியணைத்துக் கொண்ட சம்பவம் குறித்து இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கவுன்டர் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கோலி - கம்பீர் மைதானத்திற்குள் கட்டியணைத்துக் கொண்ட போது, வர்ணனையில் பெட்டியில் இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் அணைத்துக் கொண்டதற்கு கே.கே.ஆர் அணிக்கு ஃபேர்ப்ளே விருது கிடைக்க உதவியாக இருக்கும்." என்றார்.
அதற்கு சட்டென கவுன்டர் போட்ட ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், "ஃபேர்ப்ளே விருது மட்டுமல்ல, ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்" என்று கூறினார். சுனில் கவாஸ்கரின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை கொண்டுவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“